NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

#அறிவியல்-அறிவோம்: "உடல் நலம் காக்கும் கடுகு "


(S.Harinarayanan)



கடுகு சிறுசுதான், ஆனால் அதில் பொதிந்துள்ள ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் கடலளவு பெருசு. மஞ்சள் வண்ணத்தை வாரியிறைத்ததுபோல, கடுகு வயல் பூத்திருக்கும் அற்புதக் காட்சியைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க முடியாது. வசந்தகாலத்தின் தொடக்கத்தை அறிவிக்கும் அந்த வண்ண வரவேற்பு, வட இந்தியப் பண்பாட்டில் மறக்க முடியாத காட்சிகளுள் ஒன்று. அழகாக விரிக்கப்பட்ட மஞ்சள் கம்பளம் போன்ற தோற்றத்தைத் தரும் மஞ்சள் கடுகுத் தாவரம், நமது இமயமலை அடிவாரத்தில் பிறந்தது.

தாவரவியல் ரீதியாகப் பார்த்தால் புரோகோலியும் முட்டைக்கோஸும் கடுகுக்குச் சொந்தக்காரர்கள் என்று சொன்னால் நம்ப முடியாதுதான். இந்தத் தாவரம் பிராசிகேசி (Brassicaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
"பிரேசிகா ஜன்சியா" என்பது இதன் தாவரவியல் பெயர்.
 இந்தக் குடும்ப தாவரங்கள் அனைத்தும் தீவிரமான புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை.

கடுகில் 40 வகைகளுக்கு மேல் இருக்கின்றன. இருந்தாலும் அவற்றில் மூன்று வகைகள் மட்டுமே பரவலாகப் பயிரிடப்படுகின்றன. கறுப்புக் கடுகு மத்தியக் கிழக்குப் பகுதியையும், வெள்ளை கடுகு கிழக்கு மத்தியத் தரைக்கடல் பகுதியையும், மஞ்சள் கடுகு இமயமலைப் பகுதியையும் தாயகமாகக் கொண்டவை.

மருத்துவ குணங்கள்:

கடுகு, உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். சமையலில் கடுகைப் பயன்படுத்தும்போது வெடிக்கும். கடுகு வெடித்தால்தான், அதில் உள்ள நறுமண எண்ணெய்கள் வெளியே வந்து, உணவு வாசனையாக மாறும். கடுகு ஒரு சிறந்த எண்ணெய் வித்து. கடுகு எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம். 

கடுகு எண்ணெயைத் தேய்த்துக் குளித்துவந்தால், உடல் வலி நீங்கும். குறிப்பாக, தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும். உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து, எண்ணெயில் காய்ச்சி, வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால், உடனடி நிவாரணம் கிடைக்கும். எண்ணெயில் வதக்கும் பொருட்களோடு கடுகைச் சேர்ப்பது சுவைக்காக மட்டும் அல்ல, இதனால் உடலும் வலுப்பெறும். 

கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும். பின்னர் ஒருடம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும். 

அடிபட்டு ரத்தம் ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுபோட ரத்தக்கட்டு மறையும். கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகு பற்று நிவாரணம் தரும். கை, கால்களில் சில்லிட்டு விரைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்று போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும். 

விஷம், பூச்சிமருந்து, அருந்தியவர்களுக்கு இரண்டுகிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும். இதனால் விஷத்தின் தாக்கம் கட்டுப்படும்

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை:

கடுகில் அதிகம் உள்ள ஐசோதியோசயனேட் புற்றுநோய் உருவாக்கும் பொருட்களில் உள்ள நஞ்சை நீக்குகிறது. அது புற்றுநோய் செல்களைத் தடுத்து, குடல்-இரைப்பை தடத்தையும், குடல்வாலையும் பாதுகாத்துப் புற்றுநோய்க்கு முட்டுக்கட்டை போடுகிறது. ஆயுர்வேதத்தில் வெள்ளைப்பூண்டு, மஞ்சளுடன் கடுகு எண்ணெய் சேர்த்துக் காய்ச்சப்பட்டு, எலும்பு மூட்டுகள், தசை வலிகளைக் குறைக்கும் மசாஜ் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.

கடுகு விதைகள் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மையைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் பிரிவதை அதிகரிக்கும், உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தரும், ரத்தஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும் செய்யும்.

கடுகில் உள்ள வேதிப் பொருட்கள்:

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். சின்னஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உயர்தர சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. வைட்டமின்களும், ஆன்டிஆக்ஸிடென்ட்களும் அடங்கியுள்ளன. கடுகில் உள்ள சல்பர், அப்லோ டாக்ஸின் போன்றவை நச்சுத்தன்மையை நீக்குகிறது. 
கடுகில் உள்ள பி-காம்ளக்ஸ் வைட்டமின் போலேட்ஸ், நியாசின், தையாமின், ரிபோப்ளோவின், வைட்டமின் பி - 6 போன்றவை அதிகம் காணப்படுகின்றன. கடுகில் உள்ள ப்ளேவனாய்டுகள் உடலுக்கு அதிக நன்மை தருகிறது. கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive