திருச்சி மாவட்டத்தில் 6 அரசு பள்ளிகளில் சன் பவுண்டேஷன் சார்பில் ரூ.92 லட்சம் செலவில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


 இதன் மூலம் தங்களது கல்வித் தரம் உயரும் என்று மாணவர்களும், கற்பிக்கும் சூழல் மேம்படும் என்று ஆசிரியர்களும் பெருமிதம் கொண்டனர்.

 நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கத்துடன் சன் பவுண்டேஷன் தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக அளிக்கப்பட்டு வரும் இந்த நிதி உதவி மூலம் ஏழை எளியோருக்கு கல்வி, தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் கிராமப்புற இளைஞர்களின் மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


மேலும், மருத்துவ ஆராய்ச்சி திட்டங்களுக்கும் சன் பவுண்டேஷன் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறது.


இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்தில் 6 அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக சன் பவுண்டேஷன் ரூ.92 லட்சம் நிதியுதவியை கடந்த ஆண்டு வழங்கியது.


அதன்படி, வேர்ல்டு விஷன் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் மருங்காபுரி ஊராட்சிக்கு உட்பட்ட 6 அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


 இந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, இவற்றை மாணவர்களுக்கு சன் பவுண்டேஷன் சார்பில் காவேரி கலாநிதி மாறன் அர்ப்பணித்தார்.


 மேலும், மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நவீன கழிப்பறை, விளையாட்டு உபகரணங்கள், மாணவர்களுக்கான டெஸ்க் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


 இதுதவிர, தேனூர் ஊராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் காவேரி கலாநிதி மாறன் கலந்துரையாடினார். அப்போது, மாணவர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.யாகபுரம், டி.இடையான்பட்டி, முத்தாழ்வார்பட்டி கிராமங்களில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களையும் காவேரி கலாநிதி மாறன் பார்வையிட்டு, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதுேபால, சன் பவுண்டேஷன் அளித்த நிதி உதவி மூலம் கோவில்பட்டி அரசு மேனிலைப்பள்ளியில் குடிநீர் மற்றும் கழிப்பறைகள், பழுதடைந்த கட்டிட சீரமைப்பு, விழா அரங்க மேடை உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டன.


 இவற்றை மாணவர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்காக கோவில்பட்டி வந்த காவேரி கலாநிதி மாறனுக்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


 பின்னர் பள்ளி வளாகத்தில் அவர் மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியை முன்னிட்டு, மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


சன் பவுண்டேஷன் நிதி உதவி மூலம் செய்யப்பட்டுள்ள வசதிகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


 ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்ட உதவிகளுக்காக சன் பவுண்டேஷன் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. அந்த வகையில், இதுவரை சுமார் 60 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments