23 அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்பு பணி

பொது தேர்வை முறைகேடின்றி நடத்தும் வகையில், 23 உயர் அதிகாரிகளுக்கு, மாவட்ட தேர்வு கண்காணிப்பு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், மார்ச், 1ல், பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. மார்ச், 6ல், பிளஸ் 1; மார்ச், 14ல், 10ம் வகுப்புக்கும், பொது தேர்வு துவங்க உள்ளது. இந்த தேர்வுகள், ஏப்., 29ல் முடிகின்றன.இந்நிலையில், தேர்வை முறைகேடின்றி நடத்தும் வகையில், கண்காணிப்பு படை மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்காக, இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் என, 23 உயர் அதிகாரிகளுக்கு, மண்டலம் மற்றும் மாவட்ட அளவில், தேர்வு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும், இன்றே அவரவருக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, தேர்வுக்கான முன்னேற்பாட்டை கவனிக்க வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் மற்றும் தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி ஆகியோர் உத்தரவிட்டுஉள்ளனர்.

Share this

1 Response to "23 அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்பு பணி "

  1. முதலில் நாமக்கல் மாவட்டத்தில் வாட்ஸ்ஆப் தகவலின் மூலம் வெளியாகி, நாளிதழ்களில் வந்த தேர்வு கண்கானிப்பாளர்களின் பெயரை வெளியிட்ட அந்த மாவட்ட CEO மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதா? பணியிடை நீக்கம் கூட செய்யவில்லையாமே. இதுதான் அரசு நடவடிக்கையா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...