நெருப்பாற்றை நீந்திக் கடப்போம்! - கவிதை


குணமாக எடுத்துச் சொல்லுங்கள்!
குற்றவாளிகள் போல் வையாதீர்கள்!
எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள்!
கொடுங்சொல்லால் காயப்படுத்தாதீர்கள்!
பக்குவமாகச் சொல்லித் தாருங்கள்!
பழிச்சொல்லால் அடிக்காதீர்கள்!
உரிமைக்கான குரலை ஆதரிக்க முன்வாருங்கள்!
ஊதியத்திற்கான கூக்குரல் என அந்நியப்படுத்திப் பார்க்காதீர்கள்!
நியாயத்தை உள்ளுணர்ந்து பேசுங்கள்!
அநியாயம் என்று பிதற்றித் தூற்றாதீர்கள்!
ஆகப் பெரியவன்
ஆசிரியன் என்னும் சமூகம்
முன்னோக்கிச் செல்கிறது...
அற்பன் எனக் கூச்சலிடும் கூட்டம்
பின்னோக்கி அல்லவா போகும்!
தம் தவறுகளைக் கடந்து
மீண்டு வரும் எம் ஆசிரியப் பேரினம்!
மீண்டுமொரு உரிமைக்கான போராட்டத்தில்
நிச்சயம் தோள்கொடுக்கும் இதே
நம் பொதுஜனம்!
துவண்டு கிடக்கும் எனதருமை தோழனே!
இது - தோல்வியல்ல
வெற்றிகரமான தற்காலிக பின்னடைவே!
நீந்திக் கடப்போம் இந்த நெருப்பாற்றை!
நீதி வெல்லும் தூரம் வெகுதொலைவிலில்லை!
முனைவர் மணி.கணேசன்

Share this