ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டை முன்னிட்டு நினைவு சின்னம் அமைக்க முடிவு

13 ஆயிரம் கிராம மண் எடுத்து ஜாலியன்வாலாபாக் படுகொலை நுாற்றாண்டை முன்னிட்டு நினைவு சின்னம் அமைக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் மக்கள் ஒன்றாக கூடி கடந்த 1919ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி சுதந்திர போராட்டத்தை நடத்தினர். மக்களின் போராட்டத்தை கலைக்க ஆங்கிலேய அதிகாரியான ஜெனரல் டயர் என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் நூற்றுக்கணக்கானமக்கள் பலியாயினர். சுதந்திரபோராட்ட வரலாற்றில் மாறாத வடுவாக இச்சம்பவம் அமைந்தது.

இச்சம்பவத்தின் நூற்றாண்டு விழா வரும் ஏப்ரல் மாதம்13ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதனைமுன்னிட்டு பஞ்சாப் அரசு வெகுவிமரிசையாக கொண்டாட முடிவு செய்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து 13 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் எடுத்து வந்து அதன் மூலம் அமிர்தசரஸில் ஜாலியன்வாலாபாக் நினைவு சின்னம் அமைக்க முடிவு செய்துள்ளது.

Share this

0 Comment to "ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டை முன்னிட்டு நினைவு சின்னம் அமைக்க முடிவு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...