அதிக நேரம் தூங்கினால் அதிக நோய் வரும் - எச்சரிக்கை!

தூக்கம் என்பது நமது உடலுக்கு தேவையான, அவசியமான ஒன்றாகும். ஏனெனில் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதில் தூக்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. நாள் முழுவதும் வேலை செய்வதால் உண்டாகும் சோர்விலிருந்து தப்பிக்கவும், அடுத்தநாள் வேலை செய்வதற்கு தேவையான ஆற்றலை வழங்கவும் தூக்கம்தான் அடிப்படையான தேவையாகும்.

ஒருநாளைக்கு ஒரு மனிதன் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அதற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கும்போது அது உஙகள் உடலில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கிய முறையிலிருந்து மாறிவிட்ட நமது வாழ்க்கை முறையில் தூக்கத்தின் அளவு குறைந்தால் எந்த ஆபத்து ஏற்படும் என்று ஓரளவிற்கு அறிவோம். ஆனால் குறிப்பிட்ட நேரத்தை விட அதிகம் தூங்கினால் என்னாகும் என்பதை பற்றிய புரிதல் நமக்கு மிகவும் குறைவாகவே உள்ளது.

எடை அதிகரிப்பு

உங்கள் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் 8 மணி நேரத்திற்கு அதிகம் தூங்குவதுதான். எவ்வளவு அதிகம் தூங்குகிறீர்களோ உங்கள் உடலில் அவ்வளவு அதிகம் கொழுப்பு அதிகரிக்கும். 8 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு மற்றவர்களை விட 21 சதவீதம் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்கள் டயட் கூட அதிக தூக்கத்தால் ஏற்படும் உடல் எடையை குறைக்க இயலாது.

தலைவலி

அதிக நேரம் தூங்குவது உங்களுக்கு தலைவலி மற்றும் மைக்ராய்ன்களை தூண்டும். இதற்கு காரணம் நரம்பிய கடத்திகளில் ஏற்படும் செரோடினின் அளவின் மாறுபாடு அதிகரிப்பது ஆகும். அதிக நேரம் தூங்குவது உங்களின் காலை நேர பணிகள் அனைத்தையும் முடக்கும்.

முதுகு வலி

உங்களுக்கு முதுகு வலி அதிகமாக இருந்தால் அதற்கு காரணம் நீங்கள் அதிக நேரம் தூங்குவதாகத்தான் இருக்கும். நீண்ட நேரம் ஒரே நிலையில் படுத்திருப்பது உங்கள் தசைகளில் விறைப்பு மற்றும் வலியை அதிகரிக்கிறது. முதுகு வலி உள்ளவர்களை மருத்துவர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் தூங்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.

வயதாகுதல்

நீண்ட காலமாக அதிக நேரம் தூங்குவது உங்கள் மூளையை அதிக வயதாவது போல உணரச்செய்யும். குறிப்பாக வயதானவர்கள் நீண்ட நேரம் தூங்கும்போது அது அவர்களுக்கு அவர்களின் வயதை விட 2 வயது அதிகமாக உணரச்செய்யும். இது நினைவாற்றல் பாதிப்பு, கவனமின்மை போன பிரச்சினைகளை உண்டாக்கும். மேலும் மனநல பிரச்சினைகளை உண்டாக்கும்.

இதய நோய் மற்றும் சர்க்கரை நோய்

9 மணி நேரம் முதல் 11 மணி நேரம் வரை தூங்குபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 28 சதவீதம் அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது. மேலும் மரணத்தை ஏற்படுத்தும் இதய சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு 38 சதவீதம் அதிகம் எனவும் கூறப்படுகிறது. அதிக நேரம் தூங்குவது உங்கள் எடையை அதிகரிக்கும், எடை அதிகரிப்பும், சர்க்கரை நோயும் நேரடி தொடர்பு கொண்டதாகும். அதிக நேரம் தூங்குவது டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.

சர்க்காடியன் ரிதம் கோளாறு

சர்க்காடியன் ரிதம் கோளாறு உங்களின் உடலுக்குள் நடக்கும் செயல்பாடுகளுக்கும், உங்களின் தினசரி அட்டவணைகளுக்கும் இடையே வேறுபாடு ஏற்படும் போது உண்டாகும் நோயாகும். இதனால் தூங்குவதில் சிக்கல், பகல் தூக்கம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

கருவுறுதலை குறைக்கும்

இனப்பெருக்கத்துடன் தொடர்புள்ள ஹார்மோன்களின் உற்பத்தியானது தூக்கத்துடன் தொடர்புடையது ஆகும். செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையில் இருக்கும் பெண்கள் எப்பொழுதும் அதிக நேரம் தூங்கக்கூடாது. அவ்வாறு தூங்கினால் கருவுறும் வாய்ப்பு 43 சதவீதம் குறையுமென மகப்பேறு மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேபோல 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு 46 சதவீதம் அதிகரிக்கும்.

Share this

0 Comment to " அதிக நேரம் தூங்கினால் அதிக நோய் வரும் - எச்சரிக்கை!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...