#அறிவியல்-அறிவோம்- இரட்டை குழந்தை -எப்படி உருவாகிறது


(S.Harinarayanan)


சின்ன வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அச்சு அசலாக ஒரே மாதிரி பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘யூனியோவலர்ட் ட்வின்ஸ்’ என்று அழைக்கிறார்கள். பெலோப்பியன் குழாயில் இருக்கும் கரு முட்டையோடு, ஆணின் உயிரணு சேர்ந்து கருவான உடனே அந்தக் கரு எதிர்பாராத விதமாக இரண்டாக உடைந்துவிடும். உடைந்த கருவின் இரண்டு பகுதிகளும் தனித்தனி கருவாக செல் பிரிந்து வளர்ந்து கொண்டு போய், ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தையாக உருவெடுக்கிறது.

ஒரே கரு இரண்டாக உடைந்து உருவாவதால் இரட்டைக் குழந்தைகள் என்றாலும் நிறம், உயரம், ரத்த வகை என எல்லாமே ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்தக் கரு சில சமயம் இரண்டாக உடையும் போது சரியாக பிரியாமல், லேசாக ஒட்டியபடியே நின்றுவிடும். இப்படியாக ஒட்டிப்பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘சயாமிஸ் ட்வின்ஸ்’ என்கிறார்கள்.

இன்னொரு வகையான இரட்டைப் பிறவியும் இருக்கிறது. அதில் ஒன்று ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் பிறக்கும். ஒன்று சிவப்பாகவும், மற்றொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு கருப்பாகவும் பிறக்கும். இப்படி ஒன்றுக்கொன்று கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘பைனோவளர் ட்வின்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இரட்டையர்களை கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரே மாதிரியாக பிறக்கும் இரட்டையர்களை விட, சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டையர்களே உலகில் அதிகம்.

இந்த வகை இரட்டைக் குழந்தைகள் உருவாவதற்கு காரணம், பொதுவாக பெண்ணின் கருப்பையில் ஒரு கரு முட்டை மட்டுமே வெடித்து வெளிவரும். சில சமயங்களில் வெகு அபூர்வமாக இரண்டு கரு முட்டைகள் வெடித்து வெளியே வரும். அவைகள் ஆணின் உயிரணுவோடு தனித்தனியாக சேர்ந்து இரண்டு கருவாகி ஒரே சமயத்தில் பிறப்பதுதான் வெவ்வேறு நிறம், வெவ்வேறு சாயலில் இருக்கும். அதைவிடுத்து கர்ப்பிணிப் பெண்கள் இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால், இரட்டைக் குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை.

இதெல்லாம் சரி, ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து குழந்தைகள் பிறக்கின்றனவே, இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம் தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Share this

0 Comment to "#அறிவியல்-அறிவோம்- இரட்டை குழந்தை -எப்படி உருவாகிறது"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...