இன்றைய கணித வினாத்தாள்
மாணவர்களை மட்டுமல்ல, ஆசிரியர்களையும் கலக்கமடைய செய்துவிட்டது.
முதன்முறையாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை அச்சமடையவும், மனரீதியாக பாதிக்கும் வகையிலும் கேள்வித்தாள் அமைந்துள்ளது.
பொதுவாக 50% எளிமையாகவும், 30% சராசரியாகவும், 20 % கடினமாகவும் வினாத்தாள் அமையலாம்.
ஆனால் வினா தயாரித்தவர் தனது திறமையை வினா வடிவமைப்பில், அதுவும் மாணவர்களிடம் காட்டியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் வராத வினாக்களாக 5 மதிப்பெண்கள, 2 மதிப்பெண்கள் வினாக்களாக உள்ளன. 1 மதிப்பெண் வினாவும் அப்படியே ....
மெல்லக்கற்கும், சராசரி மாணவர்களை கலக்கமடைய செய்துள்ளது இந்த கணித வினாத்தாள்...
ஒவ்வொரு பள்ளியிலும் சனி, ஞாயிறு, காலை, மாலை வகுப்புகள் அதிகம் எடுக்கும் கணித ஆசிரியர்கள் வேதனைப்படுகிறோம்...
நினைத்துப் பாருங்கள்.... மற்ற பாடங்களில் 90,95,98 மதிப்பெண்கள் எடுப்பவர்கள் கணிதத்தில் குறைவாக எடுக்கும் போது, கடின உழைப்பு செய்த கணித ஆசிரியர்கள் மனம் படும் வேதனை சொல்லி மாளாது.
இனியாவது மாறுமா?....?
கிராமங்களின் வளர்ச்சியே
இந்தியாவின் வளர்ச்சி ...
கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சியே இந்திய "மனித வளத்தின்" வளர்ச்சி....
இதை உணராத தேர்வுத் துறையை என்னவென்று சொல்வது ....?

1 comment:

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments