2011க்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக் கட்டிடங்களின் திட்ட அனுமதி தொடர்பான இடைக்கால தடையை நீட்டித்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.


மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிக் கட்டிடங்களின்  திட்ட அனுமதியை சமர்ப்பிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகளை அறிவுறுத்தி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளிக் கல்வித் துறை அரசாணையை பிறப்பித்தது.


இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி தனியார் பள்ளிகளின் சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.


 அரசாணைக்கு தடை விதித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி ராஜா, 2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் திட்ட அனுமதியில் குறைபாடுகள் இருந்தால், நகரமைப்பு துறை இயக்குனருக்கு விண்ணப்பித்து, நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார்.


 இதற்கும், தனி நீதிபதி உத்தரவுக்கும் தடை விதிக்க கூறி, தனியார் பள்ளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை மேலும் 4 வார காலத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டனர்.

1 comment:

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments