பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.03.19

மார்ச் - 21

உலக வன தினம்

பன்னாட்டு வன நாள் (International Day of Forests) எனப்படும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் சர்வதேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2012, நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியும் வருகிறது.

திருக்குறள்

அதிகாரம்:புறங்கூறாமை

திருக்குறள்:189

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை.

விளக்கம்:

பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!

பழமொழி

Give respect and take respect

மரியாதை கொடுத்து மரியாதையை வாங்க வேண்டும்

இரண்டொழுக்க பண்புகள்

 1. கூட்டு முயற்சி வேலையை பகுத்து வெற்றியை பெருக்கும்
2. எனவே மற்றவர்களுடன் கூடி வாழ்ந்து எம் பள்ளி, எனது ஊர் மற்றும் என் நாடு சிறக்க உழைப்பேன்.

பொன்மொழி

சிந்தனையைவிட செயலால்தான் எல்லோரையும் மாற்றி அமைக்க முடியும்.

   - வில்லியம் வேர்ஸ்ட்வொர்த்

பொது அறிவு

1.வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மிகச்சிறிய பாராளுமன்ற தொகுதி எது?

 லட்சத்தீவுகள்

2. 2019,மார்ச் 21 உலக காடுகள் தின கொண்டாட்டத்தின் கருப்பொருள் என்ன?

    'வனம் மற்றும் கல்வி', வனத்தை நேசிக்க கற்றுக் கொள்.

மக்களே ஜாக்கிரதை! - ஓட்ஸ்க்கு சொல்லுங்க குட்பை1.  ஓட்ஸ் வெளிநாடுகளில் விளையும்  பயிர் வகையாகும். இதனை அதிக அளவில் எடுத்துக்கொள்ள இயலாது. ஆனால் பசியை அடக்கும் திறன் உண்டு. சில வழிமுறைகளால் தான் இதனை தட்டையாக மாற்றுகின்றனர்.

2. ஓட்ஸின் மதிப்பை விட நம்ம ஊர் ராகியின் மதிப்பு பல மடங்கு அதிகம். 1கிலோ ராகி சாப்பிடுவது என்பது 4கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம். அந்தந்த நாடுகளிலிருந்து இங்கு நம் இந்தியாவுக்கு வர ஆகும் எரிபொருள் செலவு, MNC நிறுவனங்களின் கொள்ளை லாபம் எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை அநியாய விலைக்கு நம் தலையில் கட்டுகின்றன.

3. அதைவிட ராகி, கம்பு, சோளம், திணை, வரகு, சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை. விலையும் குறைவு!

4. சத்துநிறைந்த நம் பாரம்பரிய உணவு இருக்க சக்கையை உண்டு நம் பணத்திற்கும் உடல்நலத்திற்கும் வேட்டு வைக்கலாமா?
 இதை என்றென்றும் சிந்தையில் இருத்துங்கள்! அந்நிய பொருட்களை அநியாய விலைக்கு வாங்குவதை அறவே நிறுத்துங்கள்!

English words and Meaning

*Haunt  நடமாடு,அடிக்கடி சென்றுவா
*Ensure    உத்தரவாதம், நிச்சயம்
*Carve.    உருவாக்கு, செதுக்கு
*Fortify பலப்படுத்து,
அரண்செய்
*Mature. நன்குவளர்ந்த,
முதிர்ந்த

அறிவியல் விந்தைகள்

*எலும்பு*
* உயிர்களின் அசைவிற்கு எலும்பும் தசைகளுமே உதவி செய்கின்றன.
* எலும்புகள் கடினமானவை. இவை முக்கியமாக கால்சியம், ஆக்ஸிஜன் மற்றும் பாஸ்பரஸால் ஆனவை.
* எலும்பு மஜ்ஜையில் இருந்தே இரத்த செல்கள் உற்பத்தி ஆகிறது.
* இரண்டு எலும்புகள் சேரும் இடம் மூட்டு ஆகும்.
* உடலின் முக்கிய உள் உறுப்புகளாகிய இதயம், மூளை, நுரையீரல் மற்றும் சிறுநீரகம் போன்றவற்றை பாதுகாப்பது எலும்புகள்.

Some important  abbreviations for students

* IQ   -  Intelligence Quotient

* IRC   -   International Red Cross

நீதிக்கதை

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு “உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?” என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

இன்றைய செய்திகள்
21.03.2019

* ஓய்வு ஐபிஎஸ் திலகவதி, மூத்த பெண் வழக்கறிஞர்கள் அடங்கிய பெண்கள் சட்ட பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாலியல் உள்ளிட்ட பெண்களின் எந்த புகார் தொடர்பாக இலவசமாக சட்ட உதவி வழங்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

* உலக அளவில் மிகவும் குறைந்த செலவில் வாழக்கூடிய நகரங்களில் சென்னையும் இடம் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

* கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தரமற்ற குல்பி ஐஸ் விற்பனை அமோகம்: குழந்தைகள் உடல்நிலை பாதிக்கும் அபாயம்.

* தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த 3 ஆண்டுகளில் மிகவும் சரிவு: ஆய்வறிக்கையில் தகவல்!

* பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் பி.வி.சிந்து 6-வது இடத்தில் நீடிப்பு.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸Retired IPS officer Thilakawati along with a senior women attornies,legal protection organisation has been created . This organization has been created to provide free legal assistance to any complaint of women including sexual abuse

🌸Chennai has also found a place in the world's economically lowest surving cities says the report

🌸 In the summer heat a non-standard Gulfi ice sale: the risk of the health of children.

🌸Birth rate of girl child in Tamil Nadu has declined since last 3 years: mandate report

🌸India's P.V.Sindhu is ranked 6th in the Badminton rankings.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Have a nice day😊

Prepared by
Covai women ICT_போதிமரம்

Share this

0 Comment to " பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.03.19"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...