Hi Whatsapp Admins!

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Whatsapp குழுவில் பெற 76049 35219 எனும் Cell Numberஐ தங்கள் Whatsapp குழுவில் இணைக்கவும்.
மார்ச் - 22


உலக நீர் தினம்

* உலக நீர் நாள் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
நீர்வளத்தைக் காப்பதும், அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.

திருக்குறள்

அதிகாரம்:புறங்கூறாமை

திருக்குறள்:190

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.

விளக்கம்:

அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?

பழமொழி

The early bird catches the worm

விரைந்து முயற்சிப்போருக்கே வெற்றி

இரண்டொழுக்க பண்புகள்

 1. கூட்டு முயற்சி வேலையை பகுத்து வெற்றியை பெருக்கும்
2. எனவே மற்றவர்களுடன் கூடி வாழ்ந்து எம் பள்ளி, எனது ஊர் மற்றும் என் நாடு சிறக்க உழைப்பேன்.

பொன்மொழி

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

   - பான்னி ப்ளேயர்

 பொது அறிவு

1.உலக நீர் தினம் கொண்டாட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

22 மார்ச் 1993

2. ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை மட்டும் கொண்டுள்ள மாநிலங்கள் எவை?

 மேகாலயா, நாகாலாந்து,
 மிசோரம், சிக்கிம்.

ரீஃபைண்ட் ஆயில் இது ஒரு மெல்லக் கொல்லும் நஞ்சு…1. *ரீஃபைண்ட் ஆயில் என்றால் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்று பொருள். ஆனால் இதை உயிர்ச்சத்துக்களே இல்லாத எண்ணெய் என்று கூறலாம். நம்மில் பலர் பலவகை வியாதிகளோடு உலா வர இது ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

2. மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெயில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.
இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.

3. நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும் நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான். இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று, எலும்பு தேய்மானத்தை தடுத்தன.

English words and Meaning

Casual.        தற்செயலாக
Department.      பகுதி,
இலாகா
Arrival.         வருகை,
வந்தது
Departure.   பிரிவு,
புறப்படு
Benefit அனுகூலம், நன்மை

அறிவியல் விந்தைகள்

* தர்பூசணியில் 97%, கீரையில் 97% மற்றும் தக்காளியில் 95% நீர் சத்து உள்ளது.
* வாழைப்பழத்தில் கொழுப்பு மற்றும் சோடியம் சிறிதும் கிடையாது.
* முதலைகள் தங்கள் நாவை வெளியே நீட்ட முடியாது.
* நம் உடலில் உள்ள 98% செல்கள் ஒரு வருடத்தில் மாற்றப் பட்டு விடுகிறது.
* பிறந்ததிலிருந்து நம் கண்கள் வளர்வதில்லை அதே நேரத்தில் காதும் மூக்கும் தங்கள் வளர்ச்சியை நிறுத்தியது இல்லை.

Some important  abbreviations for students

* ISO   -   International Organisation for Standardisation

* ISRO   -   Indian Space Research Organisation

நீதிக்கதை

மாலைப்பொழுது வானத்துக்கு மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுத்து திரும்ப வாங்கிய வண்ணம் கதிரவன் மேற்குத் தொடர்ச்சி மலைக்குள் புகுந்து கொண்டிருக்கிறது.

ஆறாம் வகுப்புப் படிக்கும் கணேஷ் பள்ளியில் இருந்து வந்தவுடன் புத்தகப்பையை இறக்கிவிட்டு அடுப்படியில் கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்திருந்த பொரிகடலையை இரண்டு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு தெருவின் முற்றத்தில் விளையாடப் போய்விட்டான்.

இருள் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.

“ஏய்…கணேஷ்! விளையாடியது போதும், வந்து படிடா” என்று அம்மா கூவ, ஓடிவந்தான்.

“போய் கை, கால் அலம்பிட்டு மாடி மேலே போயி படி”

கணேஷ் நெடுநேரம் மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தான்.

“கணேஷ் நேரமாயிடுச்சு. சாப்பிட்டு தாத்தா கூடப் போய்ப்படு. காலையில் படிக்கலாம்” என்றாள் அம்மா.

சாப்பிட்டுவிட்டு தாத்தாவுடன் படுத்தான். தூக்கம் வரவில்லை. “தாத்தா ஒரு கதை சொல்லுங்க தாத்தா” என்றான்.

பேரக்குழந்தை கேட்கிறதே என்று தாத்தாவும் கதை கூற ஆரம்பித்தார்:

ஒரு ஊர்ல ஒரு ராஜா. அவரு ஆட்சியில மாதம் மும்மாரி பொழிந்தது. அந்த ராஜாவுக்கு மீனான்னு ஒரு ராஜகுமாரி. தேவதை போல கொள்ளை அழகு. குருகுலத்துல நல்லா பாடம் படிச்சும் வீர, தீர வித்தைகளை கத்துகிட்டும் இருந்தது. அழகும் அறிவும் இணைந்த பொக்கிஷம் என்று நாட்டு மக்கள் இளவரசியைப் புகழ்ந்தார்கள்.

மீனாவுக்காகவே வனம் போன்ற அழகுடன் அரண்மனைக்குப் பக்கத்தில் நந்தவனம் அமைத்துக் கொடுத்தார் ராஜா. மாதம் ஒரு தடவை அரண்மனையை விட்டு வெளியே வரும் மீனா, நந்தவனம் வந்து உலவிவிட்டுப் போவாள்.

அந்த ஊர் மக்கள் எல்லாம் மகிழ்ச்சியா இருக்கிற நேரத்துல அந்த ஊருக்குள்ள ஒரு வேதாளம் புகுந்தது. அந்த வேதாளம் ராத்திரி நேரம் ஊருக்குள் வந்து கல்யாணம் ஆகாத பொண்ணுங்க யாரு வந்தாலும் அடிச்சி ரத்தம் குடிச்சு கொன்னு போட்டுடும். கல்யாணம் ஆகாத பெண்களை விட்டுட்டு வேற யாரையும் தொடுறதும் இல்லை. கண்ணுக்குத் தட்டுப்படறதும் இல்லை.

இந்த விஷயம் ராஜாவுக்குத் தெரிஞ்சி, வேதாளத்தைக் கொல்ல ஆட்களை அனுப்பினார். ஆனாலும் அதைக் கொல்ல முடியவில்லை. ராஜா குழம்பிப் போய் சோர்வாக இருந்தார்.

ராஜாவின் மனக்கவலையை மீனா அறிந்தாள்.

ஒரு நாள் ராஜகுமாரி ரொம்ப தைரியமாக ராத்திரி நேரம் அரண்மனைப் பின்பக்க வாசல் வழியா வேதாளத்தைப் பார்க்க கிளம்பினாள். கொஞ்சதூரம் போயி ஊரைக் கடந்ததும் வெள்ளிக்கொலுசை மாட்டி “ஜலக் ஜலக்” -னு சத்தம் வர்ற மாதிரி நடக்க ஆரம்பிச்சா.

உடனே பக்கத்துல இருக்குற ஒரு மரத்துல இருந்த அந்த வேதாளம் பாய்ந்து வந்து நின்றது. ராஜகுமாரி மீனாவுக்கு அதைப் பார்த்ததும் பயமாகிவிட்டது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வேதாளத்தைப் பார்க்காத மாதிரி உட்கார்ந்திருந்தாள்.

அந்த நேரம் ராஜகுமாரியின் கண்ணைப் பார்த்த வேதாளம் மின்னல் தாக்கின மாதிரி தடுமாறியது. அதே வேளையில் ராஜகு‘ரி சுதாரித்தபடி, தனது இடுப்பில் இருந்த கத்தியைத் தூக்கி வேதாளத்தின் நெஞ்சில் எறிந்தாள். வேதாளத்தின் நெஞ்சு பிளந்து ரத்தம் பீறிட்டது.

வேதாளம் சாகப்போற நேரத்துல ராஜகுமாரியை கூப்பிட்டுச் சொன்னது, “தேவியாரே! நான் வேதாளம் இல்லை. பக்கத்து நாட்டு அரக்க வம்சத்தவன். உங்கள் ஊரில் செல்வச் செழிப்போடு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை சீர்குலைக்க எங்கள் ராஜாவால் வேதாளம் வேஷம் போட்டு அனுப்பப்பட்டவன் நான்” என்று சொன்னான். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் உயிர் பிரிந்தது.

நாடே ராஜகுமாரியைப் புகழ்ந்தது. வீரத்திருமகள்னு அவளை முடிசூட்டி இளவரசி ஆக்கினார்கள்.

“என்னடா பேரப்புள்ள அந்த ராஜகுமாரி மாதிரி நீயும் நல்லா படிச்சி வீரமா, நல்ல தைரியத்தோடு, எதுக்கும் பயப்படாம இருக்கணும் என்ன!” என்று தாத்தா கேட்க, “கொர்…கொர்” என்ற குறட்டையுடன் கணேஷ் தூங்கிக் கொண்டிருந்தான்.

விடியற்காலை ஐந்து மணிக்கு படிப்பதற்காக கணேஷை எழுப்பி விட்டார். கணேஷூம் எழுந்து முகம் கழுவிவிட்டு வந்து புத்தகத்தை எடுத்தவாறு தாத்தாவிடம் கேட்டான்:

“என்ன தாத்தா! ராத்திரி நீங்க ஏதோ ராஜா, ராஜகுமாரி, வேதாளம்னு சொன்னீங்க. ஆனா எனக்கு முழுக்கதையும் ஏன் சொல்லலை?” என்று கேட்டான்.

தாத்தா கலகலவென்று சிரித்து விட்டார்.

இன்றைய செய்திகள்
22.03.2019

* சொந்த கார் வைத்திருப்பவர்கள், ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் ‘கியாஸ்’ மானியம் ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

* அமெரிக்காவின் கொலம்பியா மாவட்டத்தின் மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியோமி ராவ் பதவி ஏற்றார்.

* உலக மகிழ்ச்சி தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலை ஐ.நா வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் குணேஸ்வரன் மியாமி ஓபன் டென்னிஸ் தொடருக்கான முதன்மை சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

* மலேசியாவின் கோலாலம்பூர் நகரில்  நடைபெற்ற 55வது சர்வதேச நீச்சல் போட்டியில், யுஏஇ பள்ளியில் பயிலும் தமிழக மாணவர்  விசேஷ் பரமேஸ்வரன் (13வயது) தங்கப் பதக்கம் வென்றார்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸The central government is considering the cancellation of 'Kiaas' subsidy if own car holders have more than Rs 5 lakh in income.

🌸 Neomi Rao of Indian origin was appointed as judge of the Court of Appeal in the Columbia District of the United States.

🌸 World happiness day is celebrated yesterday, the UN has released a list of delightful countries in the world. It has been said that this year India has not been happier over the past year.

🌸Tamilnadu tennis player Kuneswaran advanced to the primary round of Miami Open Tennis Series.

🌸 Visesh Parameshwaran (13 years old), a Tamil student at UAE School, won the gold medal at the 55th International Swimming Championship in Kuala Lumpur, Malaysia.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Everyday is a good day 😊

Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments