திருமண மேடையில் மணமகனை காத்திருக்க வைத்துவிட்டு 12ம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவியை பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹர்சுல் கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா பவார்(20). ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த இவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். படிக்கும்போதே ரேணுகாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.‘
திருமணத்துக்கு கடந்த 9ம் தேதி நாள் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதே நாளில் ஒரே அரங்கில் வேறு இரு ஜோடிகளுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது
. மூன்று ஜோடிகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க ஊர் பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர். மூன்று ஜோடிகளுமே ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதால் செலவை குறைப்பதற்காக இப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், சனிக்கிழமை பிளஸ் 2வில் பொருளாதார(எகனாமிக்ஸ்) பாடத் தேர்வு இருந்தது. இதனால், திருமண தேதியை மாற்றுமாறு ரேணுகா வலியுறுத்தினார்.
ஆனால், குடும்பத்தினரும் ஊர் பெரியவர்களும் அதனை ஏற்கவில்லை. ஆனாலும் சோர்ந்து விடாத ரேணுகா, தேர்வு எழுதிய பிறகுதான் திருமண மண்டபத்துக்கு வருவேன் என நிபந்தனை விதித்தார்.
இதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அன்றைய தினம் காலையில் மணமகளுக்குரிய அலங்காரத்தை செய்து கொண்டு நேராக தேர்வு மையத்துக்கு சென்றார்.
மணக்கோலத்தில் வந்த அவரை பார்த்த சக மாணவ, மாணவியர்களும் ஆசிரியர்களும் ஆச்சரியமடைந்தனர். அதனை கண்டுக்கொள்ளாத ரேணுகா தேர்வு எழுதினார். தேர்வு மதியம் 2 மணிக்கு முடிந்த பிறகு ரேணுகா திருமண மண்டபத்துக்கு சென்றார்.
அவரை அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். அதன் பிறகு மூன்று ஜோடிகளுக்கும் குடும்பத்தினர் மற்றும் ஊர் பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடந்தது.
இதுகுறித்து ரேணுகா கூறுகையில், ‘‘என் தந்தை இறந்த பிறகு எனது குடும்பம் வருமானமின்றி மிகவும் கஷ்டப்பட்டது. படித்தால்தான் முன்னேற முடியும் என்பதை அறிந்த நான் படிப்பின் மீது தீவிர கவனம் செலுத்தினேன்.
இந்த நிலையில்தான் எனக்கு திருமணம் நிச்சயம் ஆனது. திருமண தேதியை தள்ளி வைக்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதனால் தேர்வு எழுதிய பிறகு மண்டபத்துக்கு சென்று திருமணம் செய்து கொண்டேன்.
திருமணம் முடிந்தாலும் தொடர்ந்து படித்து நல்ல வேலையில் சேர விரும்புகிறேன்’’ என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...