எத்திராஜ் கல்லூரியில் 30 மணி நேர தொடர் நாடக கின்னஸ் சாதனை முயற்சி

சென்னை எத்திராஜ் கல்லூரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளை சார்ந்த மாணவிகள் நடத்தும் 30 மணி நேர தொடர் மேடை நாடக கின்னஸ் சாதனை நிகழ்ச்சி  தொடங்கியது.

இந் நிகழ்ச்சியில் சமூக அக்கறை மற்றும் மனித உரிமைகளை மையமாக கொண்ட விழிப்புணர்வு நாடகங்களை தொடர்ச்சியாக 25 மாணவர்கள் நடத்தினர்.

இதற்கு முன்பு ஜம்முவில் 2015 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 24 மணி நேரம், 20 நிமிடங்கள் ,2 நொடிகள் நடந்த தொடர் நாடகமே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அதை முறியடிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவோம் என கல்லூரி தலைவர் சந்திராதேவி தெரிவித்துள்ளார்.

Share this

0 Comment to "எத்திராஜ் கல்லூரியில் 30 மணி நேர தொடர் நாடக கின்னஸ் சாதனை முயற்சி"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...