தமிழகத்தில்,
ஏப்ரல், 18ல் தேர்தல் நடக்க உள்ளதால், ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை
வருகிறது. மகாவீர் ஜெயந்தி காரணமாக, ஏப்ரல், 17ல், அரசு விடுமுறை
அறிவித்துள்ளது.
தற்போது, ஓட்டுப்பதிவு, ஏப்., 18ல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றும் பொது விடுமுறை விடப்படும். ஏப்., 19ல், புனித வெள்ளிக்கு, அரசு விடுமுறை. அடுத்து, ஏப்ரல், 20, 21, சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை வருகிறது. இது, தேர்தல் பணியில் ஈடுபடாத, அரசு ஊழியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விடுமுறை தினமான நேற்று, லோக்சபா தேர்தல் தேதியை, தேர்தல் கமிஷன் அறிவித்ததால், வழக்கமான அலுவலக நாளை விட, அதிக பரபரப்பு நிலவியது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...