பியானோ வாசிப்பதில் புதிய சாதனை படைத்த சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரம், அமெரிக்காவில் இசை போட்டியில் விருது வென்றுள்ளார். 13 வயதாகும் லிடியன் நாதஸ்வரம், சென்னையை சேர்ந்தவர்.


இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பள்ளியில் படித்தவர். பியானோவை மற்றவர்களை விட அதி வேகமாக வாசிப்பதில் தனித்திறன் பெற்றவர்.


 அத்துடன் ஒரே சமயத்தில் இரு கையால் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்துவார்.

 அமெரிக்காவில் ஆண்டுதோறும் வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்ற விருது நிகழ்ச்சி நடைபெறும்.


இதில் கலந்துகொண்டு லிடியன் நாதஸ்வரம் அதிவேகமாகவும் இரண்டு பியானோக்களையும் வாசித்து இந்த விருதை பெற்றுள்ளார். அவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.


 ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கோர்டன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட திரையுலகை சேர்ந்த பலரும் லிடியனை வாழ்த்தியுள்ளனர்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments