உலகம் முழுவதும் நூறுகோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியின் மூலம் பல்வேறு ஆபத்தான ஃபார்வர்டு மெசேஜ்கள் பரவி வரும் நிலையில்,பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வரும் பிரபல வாட்ஸ்அப் செயலியைபேஸ்புக் நிறுவனம் வாங்கி, நடத்தி வருகிறது. இந்த வாட்ஸ்அப்மொபைல் ஆப்பின் மூலம், பொதுமக்கள் குறுஞ்செய்திகள், போட்டோக்கள், வீடியோக்கள், வீடியோ கால் உள்ளிட்டவை மட்டுமல்லாது, அதிக அளவில் செய்திகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். போலிசெய்திகள் மூலம், பல தவறான தகவல்கள் பொது மக்களிடையே பரவி வருவதுஒரு பக்கம் இருக்க, ஆபத்தான லிங்குகளை பகிர்ந்து, அதன் மூலம் பயனாளர்களின்தகவல்கள் திருடப்படுவது இன்னொருஒருபக்கம் நடைபெற்றுவருகிறது.
பல்வேறு கவர்ச்சியானமெசேஜ்கள் மூலம் நமது ஆர்வத்தைதூண்டி, மொபைல் தகவல்களைதிருட முயற்சிக்கின்றனர். இதற்கு சில உதாரணங்களைபார்க்கலாம். அடிடாஸ், நைக்கிபோன்ற பிரபல ஷூநிறுவனங்களில் இருந்து, இலவசமாக ஷூ தருவதாக ஒரு சில மெசேஜ்கள் வலம் வருகின்றன. ரூ.999 ஐபோன் தருகிறோம், வாட்ஸ்அப் செயலியை பல கலர்களில் மாற்றி பயன்படுத்தலாம்என்றெல்லாம் கூறி சில போலி செயலிகளின் லிங்க்குகளைபகிர்கின்றனர். இன்டர்நெட் இல்லாமலேயேவாட்ஸ்அப்பை பயன்படுத்தலாம்.
இந்த ஆப்பை தரவிறக்கம் செய்தால், எங்கு சென்றாலும் இலவச 3G சேவை கிடைக்கும்என்று கூறும் சில பார்வர்டுகள். அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் 99% ஆஃபர்கள் தருவதாகசில விளம்பரங்கள் லிங்க் மூலம்பகிரப்படுகின்றன. இதுபோன்ற லிங்குகளை திறக்கும் போது, அதன்மூலம் போலி இணையதளங்களுக்கு நம்மை கொண்டு சென்று,தகவல்கள்திருடும் முயற்சிகள் நடத்தப்படுகின்றன.
அதனால், இவற்றையோ அல்லது இதுபோன்ற நம்பமுடியாத ஆஃபர்களை பார்த்தால் அதை ஃபார்வர்டு செய்யாமல் போவது உங்கள் மொபைலுக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்புக்கும் நல்லது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...