Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு இணையதளம் மூலம் கலந்தாய்வு இல்லை'

எதிர்வரும் கல்வியாண்டில் (2019-20) முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு இணையதளம் (ஆன்லைன்) மூலம் கலந்தாய்வு நடத்தப்படமாட்டாது என்றும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஒற்றைச் சாளர முறையே பின்பற்றப்படும் என்றும் மருத்துவக் கல்லூரி இயக்ககம் தெரிவித்தது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு திங்கள்கிழமை (மார்ச் 11) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை தொடங்கப்பட்டது. www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்யலாம் என்றும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வரும் 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முக்கிய தகவல்களும் (ப்ராஸ்பெக்டஸ்) ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இதனிடையே, இம்முறை இணையதளம் மூலமாகவே கலந்தாய்வு நடத்தப்படும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அது தற்போதைய சூழலில் சாத்தியமல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ கூறியதாவது:
மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வில் ஏற்கெனவே உள்ள நடைமுறையே கடைப்பிடிக்கப்படும். அதாவது, ஒற்றைச் சாளர முறையின் கீழ் இடங்கள் நிரப்பப்படும். இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டால், சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளில் சில சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது. எனவே, எதிர்வரும் கல்வியாண்டில் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்படமாட்டாது என்றார் அவர்.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நிலவரப்படி 1250 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் இருந்தன. இந்த நிலையில், மாநிலத்துக்கு கூடுதலாக 157 இடங்களை ஒதுக்குமாறு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் 124 இடங்களை அதிகரிக்க மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இதற்கு நடுவே, பல ஆண்டு காலமாக இருந்து வரும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை, பட்ட
மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் அண்மையில் விண்ணப்பித்திருந்தது. அதனைப் பரிசீலித்த இந்திய மருத்துவக் கவுன்சில் வாரிய உறுப்பினர்கள், 384 பட்டயப் படிப்பு இடங்களை பட்டப் படிப்புகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர்.
இதையடுத்து, எதிர்வரும் கல்வியாண்டில் (2019-20) மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 1,758-ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், நாட்டிலேயே அதிக மருத்துவ மேற்படிப்பு இடங்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் உள்ளது குறிப்பிடத்தக்கது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive