சிதம்பரம் நடராஜர் கோயிலில் கின்னஸ் உலக சாதனைக்காக புதிய முயற்சி

கின்னஸ் உலக சாதனைக்காக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.


இதனை பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.


நடேசர் கவுத்துவம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 7 ஆயிரத்து 190  நடன கலைஞர்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடினர்.

இதை கண்டு பார்வையாளர்கள் வியந்தனர்.  14 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நடன நிகழ்ச்சியின் முடிவில் கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

Share this

0 Comment to "சிதம்பரம் நடராஜர் கோயிலில் கின்னஸ் உலக சாதனைக்காக புதிய முயற்சி "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...