வாழ்வியல் நெறிகளை ஒன்றரை அடியில் விளக்கும் திருக்குறளைப் பற்றி தமிழர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் புகழ்ந்து பேசுகின்றனர்.


 இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள திருக்குறளை எழுதியது திருவள்ளுவர் என்ற தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை.


பொதுவாக திருக்குறள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்துகள், அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்களில் எழுதப்பட்டிருப்பதை நம்மால் காண முடியும்.


 மேலும் பொது நிகழ்ச்சிகள் துவங்கும் முன் திருக்குறள் வாசிக்கப்பட்டே தொடங்கும்.


 இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருக்குறளை பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்காக புதுச்சேரி நைனார் மண்டபம் பகுதி மக்கள் புதுமையான முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டு உள்ளனர்.


அதாவது சுமார் 3000 வீடுகளை கொண்ட நைனார் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு சுவர்களில் அவற்றின் உரிமையார்களிடம் அனுமதி பெற்று திருக்குறள் எழுதப்பட்டு வருகிறது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments