பயனாளிகளின் கடவுச்சொல்லுக்கு பாதுகாப்பு இல்லை: முகநூல் நிறுவனம் ஒப்புதல்


முகநூலை (ஃபேஸ்புக்) பயன்படுத்துவர்களில் லட்சக்கணக்கானோரின் கடவுச்சொல்லுக்கு (பாஸ்வேர்டு) எவ்வித பாதுகாப்பும் இல்லை என்பதை அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.முகநூல் நிறுவனத்தின் சர்வர்களில் எவ்வித பாதுகாப்பும் ஏற்பாடுகளும் இன்றி, லட்சக்கணக்கான பயனாளிகளின் முகநூல் கடவுச் சொற்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.


 இதன் மூலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் யார் வேண்டுமானாலும் கடவுச்சொற்களை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பாக முகநூல் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் பயனாளிகள் தகவல் சேமிப்புப் பிரிவின் துணைத் தலைவர் பெட்ரோ தனது வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

 முகநூல் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் தவிர வேறு எவரும் பயனாளிகளின் கடவுச்சொல்லை தெரிந்து கொள்ள முடியாது.


முகநூல் பணியாளர்கள் யாரும் கடவுச்சொல் உள்ள கணினிக் கோப்புகளை திறந்தது இல்லை. அவற்றை தவறாகப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.


 பயனாளிகளின் கடவுச்சொல் உள்ள கணினி கோப்புகள் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய தவறுதான்.


 இந்த ஆண்டு நடைபெற்ற ஆய்வின்போதுதான் அது கண்டுபிடிக்கப்பட்டது.

 இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேஸ்புக் லைட் செயலி, இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு விரைவில் தகவல் தெரிவிக்கப்படும்.


 எத்தனை லட்சம் பயனாளிகளின் கடவுச்சொற்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது என்பது சரியாகத் தெரியவில்லை.


 குறிப்பாக 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட முகநூல் கணக்குகளின் கடவுச்சொற்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளன என்றார்.


முகநூலை 60 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். முகநூல் நிறுவனத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் உள்ளனர்.

Share this

0 Comment to "பயனாளிகளின் கடவுச்சொல்லுக்கு பாதுகாப்பு இல்லை: முகநூல் நிறுவனம் ஒப்புதல் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...