பெண் ஆசிரியர்களை அருகாமையில் உள்ள வாக்குசாவடிகளில் தேர்தல் பணியில்
ஈடுபடுத்திட தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் தக்கலை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தக்கலை கல்வி மாவட்ட தலைவர் விஜயகுமார் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் விஜயராஜ், பொருளாளர் அஜின், நிர்வாகிகள் ஜோஸ் பென்சிகர், வினோத், சிவஸ்ரீரமேஷ், மகேஷ், பிரைட்சிங் மோரீஸ், டொமினிக்ராஜ், அகஸ்டஸ் சிங் ஆகியோர் பேசினர். சாந்தசீலன் நன்றி கூறினார்.
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஆசிரியர்களை அவர்களது இருப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள வாக்குசாவடிகளில் பணியமர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விரைவான விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.
உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்த கருத்தரங்கம் மற்றும் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...