என்பிஎஸ்
திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் அந்த கவலையைத் தூக்கி எறிய முடியும்.
இந்த திட்டத்தில் எவ்வளவு முன்கூட்டியே முதலீட்டைத் தொடங்குகிறார்களோ
அவ்வளவு அதிகமான லாபத்தைப் பார்க்க முடியும்.
என்பிஎஸ் என்றால் என்ன?
என்பிஎஸ் என அழைக்கப்படும் தேசிய பென்ஷன் திட்டம் ஒரு விருப்ப ஒவூதிய திட்டமாகும். பிபிஎஃப் போன்று இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் தங்களது முதலீட்டை செய்ய முடியும். முதலீட்டாளர்களின் வயது 60 வயதான பிறகு முதிர்வு தொகையை பென்ஷனாக பெறலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு வரி விலக்கும் கிடைக்கும்.
என்பிஎஸ் முதலீட்டை எங்கு? எப்படி தொடங்குவது?
ஓய்வூதிய
நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி பெற்ற மையங்கள்,
பெரும்பாலான வங்கிகள் மற்றும் சில நிதி
நிறுவனங்களில் என்பிஎஸ் முதலீட்டைத் தொடங்க முடியும்.
தேவையான ஆவணங்கள்?
1) என்பிஎஸ் திட்டத்திற்கான விண்ணப்பம்.
2) அடையாள மற்றும் முகவரிச் சான்று
3) பிறந்த தேதிக்கான சான்றிதழ்
இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் முன்பு தற்போது இருக்கும் பணவீக்கம் இன்னும் 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி இருக்கும். இன்றைய 1000 ரூபாய் 30 ஆண்டுகள் கழித்து என்ன மதிப்பை அளிக்கும் என்பதை அறிந்து முதலீட்டை மேற்கொள்வதே சிறந்தததாகும்.
இன்று 30 வயதாகும் ஒருவர் எம்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து அவருக்கு 60 வயதாகும் போது ஆண்டுக்கு 10 சதவீத லாபத்துடன் மாதம் 20 ஆயிரம், 30 ஆயிரம், 40 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம், 1 லட்சம், 1.5 லட்சம் ரூபாய் பென்ஷன் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.
மாதம் ரூ. 20,000 பென்ஷன்
என்பிஎஸ் திட்டத்தில் மாதம் 2,022 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 20,008 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.
மாதம் ரூ.30,000 பென்ஷன்
என்பிஎஸ் மாதம் 3,032 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 30,002 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.
மாதம் ரூ.40,000 பென்ஷன்
என்பிஎஸ் மாதம் 4,043 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 40,007 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.
மாதம் ரூ.50,000 பென்ஷன்
என்பிஎஸ் மாதம் 5,053 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 50,001 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.
மாதம் ரூ.75,000 பென்ஷன்
என்பிஎஸ் மாதம் 7,580 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 75,006 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.
மாதம் ரூ.1,00,000 பென்ஷன்
என்பிஎஸ் மாதம் 10,106 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 1,00,002 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.
மாதம் ரூ.1,50,000 பென்ஷன்
என்பிஎஸ் மாதம் 15,159 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 1,50,003 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.
எச்டிஎப்சி என்பிஎஸ் கேல்குலேட்டர்:https://www.hdfcpension.com/nps-calculator.html
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...