NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET 2019-க்கு 15ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: டிஆர்பி அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

 இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடப்பதை அடுத்து தகுதியுள்ள நபர்கள் மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் ேததி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


 இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தாள் ஒன்று (இடைநிலை ஆசிரியர்கள்), தாள் இரண்டு (பட்டதாரி ஆசிரியர்கள்) தேர்வு நடக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். தாள் ஒன்றுக்கான தேர்வுக்கு 150 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதில், குழந்தை மேம்பாடு மற்றும் உளவியல் சார்ந்த பாடங்களில் இருந்து 30 மதிப்பெண்களுக்கு கேள்விகளும், மொழிப்பாடங்களில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது 30, ஆங்கில மொழிப்பாடத்தில் 30, கணக்கு 30, சுற்றுச்சூழலியல் பாடத்தில் 30 கேள்விகள் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும்.


தாள் இரண்டுக்கான தேர்வில் குழந்தை மேம்பாடு 30, மொழிகள் 30, ஆங்கிலம் (கட்டாயம்) 30, கணக்கு, அறிவியல் ஆசிரியர்கள் அல்லது சமூக அறிவியல் ஆசிரியர்கள், இதர பாட ஆசிரியர்களுக்கான தேர்வில் அந்தந்த பாடங்களில் 60 கேள்விகள் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெறும்.

மேற்கண்ட தேர்வுகளுக்கான கட்டணம் ₹500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு ₹250 செலுத்த வேண்டும்.


 இந்த கட்டணத்தை ஆன்லைன் மூலம்தான் செலுத்த வேண்டும். நேரடியாக கட்டணம் செலுத்த முடியாது. தேர்வு நடக்கும் நாள்கள் குறித்து ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும்.


 தேர்வுக்கு தகுதியான நபர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்படும். தேர்வு மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்படும்.


 மேற்கண்ட தேர்வு எழுதுவோர் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். பிசி, பிசி (எம்), எம்பிசி, எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை உண்டு.


 பள்ளிக் கல்வித்துறை கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்ட அரசாணை 149ன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள்  பணி நியமனம் தொடர்பாக மீண்டும் தனியாக ஒரு போட்டித் தேர்வு  எழுத வேண்டும்.


 முறைகேடுகளில் சிக்கும் நபர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட மாட்டாது. அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive