தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவ தற்கான எழுத்துத் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. எனவே, முதுநிலை ஆசிரியருக்கு இணை யான கணினி பயிற்றுநர் பணி யிடங்களுக்கு தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் இன்று (மார்ச் 20) முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு நடைபெறும் நாள், ஹால்டிக்கெட் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரி வினருக்கு ரூ.500, எஸ்சி/எஸ்டி பிரிவுக்கு ரூ.250-ஐ இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...