கர்நாடகாவில் பருவமழை பொய்த்துப் போன நிலையில், ிகர்நாடக அரசு ரூ.88 கோடி செலவில் செயற்கை மழை பெய்விக்க முடிவு செய்துள்ளது. கர்நாடகா முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிய, மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் குமாரசாமி நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா அளித்த பேட்டியில், ''இந்த ஆண்டு பருவமழை உரிய காலத்தில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பருவமழை பெய்யவில்லை. மேலும், ஜூன் மாதத்திற்குள் பருவமழை பெய்யவில்லை என்றால் மழை பெய்யாத மாவட்டங்களில் சாகுபடி செய்ய இருமுறை செயற்கை மழை பெய்விக்க ரூ.88 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டது.

செயற்கை மழை பெய்விக்க, டெண்டர் விடப்பட்டுள்ளது. பெங்களூரு, ஹூப்பள்ளி நகரங்களில் செயற்கை மழை பெய்விக்க அரசு முடிவு செய்துள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் செய்யப்படும்,'' என்றார்.


3வது முறை: கர்நாடகாவில் இந்த ஆண்டு வறட்சி அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் முதன் முதலில்எஸ்.எம். கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது 2003ம் ஆண்டில் செயற்கை மழை பெய்ய வைக்கப்பட்டது. 'பிராஜெக்ட் வருணா' என்ற பெயரில் ரூ.9 கோடி செலவில் 80 நாட்கள் செயற்கை மழை ெபய்விக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு சித்தராமையா முதல்வராக இருந்தபோது 'பிராஜெக்ட் வருஷதாரா' என்ற பெயரில் ரூ.35 கோடி செலவில் செயற்கை மழை பெய்ய வைக்கப்பட்டது. தற்போது, ரூ. 88 கோடி செலவில் ஆகஸ்ட் மாதத்தில் செயற்கை மழை பெய்விக்க முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments