அரசு உதவி பெறும் தொடக்க,
நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர், அலுவலர்கள் காலிபணியிடங்களை தெரிவிக்க தொடக்க கல்வி இயக்குநர் கருப்பச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவலர் பணியிடங்களுக்கு உரிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் 1 முதல் 9 ம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், 10 முதல் பிளஸ் 2 வரை 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்கப்பட வேண்டும். அந்த வகையில் 2013 -- 14 கல்வி ஆண்டு வரை 7,270 உபரி ஆசிரியர் பணியிடங்களை கண்டறிந்து, அரசுக்கு ஒப்படைத்தனர். தற்போது 2014 முதல் 2018 வரை உள்ள உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு இயக்குனர் பார்வைக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் மே 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...