Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப் 4 தேர்வுக்கு அரசு சார்பில் இன்று பயிற்சி: தமிழகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு


குரூப் 4 தேர்வு எழுதும் லட்சக்கணக்கான
தேர்வர்கள் பயன்பெறும் வகையில், ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை (ஆக.21) நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி முகாமை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடக்கி வைக்கிறார். குரூப் 4 தேர்வு, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை எழுத 13 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், குரூப் 4 தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஒருநாள் பயிற்சி முகாமுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில் கலைவாணர் அரங்கத்தில் புதன்கிழமை இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. ஆயிரம் பேரைத் தாண்டியது: இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்க இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதற்கான அறிவிப்பு வெளியான சில நாள்களிலேயே ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குரூப் 4 தேர்வர்களும் பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பம் செய்துள்ளனர். இதனால், முகாமில் பங்கேற்போரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
நேரிலும் வரலாம்: இணையதளத்தில் மட்டுமின்றி, பயிற்சி முகாம் நடைபெறும் கலைவாணர் அரங்கத்துக்கு காலை 9 மணிக்கே வந்து பெயர்களைப் பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதன்கிழமை காலை 9 மணி முதல் நேரடி பதிவும் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரு கையேடு, குறிப்பு நோட்டு, மதிய உணவு, தேநீர் உள்ளிட்ட அனைத்தும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாமில் பங்கேற்போருக்கு முந்தைய தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive