நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி, இயக்குவதை விட நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதோடு, முழு நேர நடிகராகவே ஆகி விட்டதாகச் சொல்லலாம்
அந்த அளவுக்கு தொடர்ச்சியாக, நடிகராக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 2012ல், பள்ளிக் கூடங்களில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, சாட்டை என்ற படத்தில் நடித்திருந்தார் சமுத்திரகனி. அவரது நண்பர் அன்பழகன் இயக்கி இருந்தார்.

அந்தப் படம் ரிலீசாகி பெரு வெற்றியடைந்ததுமே, கல்லூரி சம்பவங்களை வைத்து படமெடுக்க வேண்டும் என்று நடிகரும், இயக்குநருமான சமுத்திரக் கனி முடிவெடுத்திருந்தார்.தற்போது, கல்லூரி காட்சிகளை வைத்து, அடுத்த சாட்டை என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் படத்தில், சமுத்திரக்கனி தான் நாயகன். சாட்டைப் படத்தை இயக்கிய அன்பழகனே, அடுத்த சாட்டை படத்தையும் இயக்குகிறார்.இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆசிரியர் தின நாளான செப்., 5ல், அடுத்த சாட்டை படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...