-----------------------------
தமிழகம்
முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2144 முதுகலை ஆசிரியர்
காலிப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்படும்
என்று கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு
வெளியிடப்பட்டிருந்தது.
இதற்காக ஆன்லைன் மூலம் 24 .6 19 முதல்
15 .7 .2019 வரை லட்சகணக்கான பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
அந்த அறிவிப்பில் *ஆன்லைன் மூலம் போட்டித் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்* என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில்
முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு 63 நாட்கள்
கடந்துள்ள நிலையில் ஆன்லைன் போட்டித் தேர்வு தேதி இன்னும் அறிவிக்க
படவில்லை.
மேலும் போட்டி தேர்வு எப்போது நடைபெறும்
என்று தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி இளைஞர்கள் மிக ஆவலுடன்
எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும்ஆசிரியர்
தேர்வு வாரியம் நடத்த உள்ள *முதுகலைஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை
ஆன்லைன்மூலம் நடத்தாமல் கடந்த காலங்களில் நடத்தப்பட்டதைப் நேரடியாக
எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும்*.
மேலும்
பள்ளி திறந்து மூன்று மாதங்கள் நிறைவு பெற கூடிய சூழலில் அரசு மேல்நிலைப்
பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக
நிரப்ப போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறேன்.
மேலும்
முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கும் பெரும்பாலான
ஆசிரியர்கள் தாங்கள் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்த நிலையில் தங்கள்
வேலையை விட்டுவிட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வை எழுத ஆவலுடன்
எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் மிக
விரைவாக தேர்வு தேதியை அறிவிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்
ஆ. இராமு
மாநிலத் தலைவர்
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
7373761517
டேய் உனக்கு என்னடா அவசரம் பரசுதேசி....
ReplyDeleteஐயா, ராமய்யா தேர்வு வரும் போது வரட்டும் .
ReplyDeleteநீங்கள் உங்கள் கற்பித்தல் பணியை சிறப்பாக செய்யுங்கள்...