Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

DGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணாக்கர்களின் பெயர் , பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியலை EMIS - ல் பதிவேற்றம் செய்ய 18 . 11 . 2019 முதல் 29 . 11 . 2019 வரை கால அவகாசம்!

images%252826%2529
நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணாக்கர்களின் பெயர் , பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியலை EMIS - ல் பதிவேற்றம் செய்ய 18 . 11 . 2019 முதல் 29 . 11 . 2019 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது . மேற்குறிப்பிட்டவாறு தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணாக்கரின் விவரங்களையும் சரிபார்த்து , திருத்தம் செய்யும் பணியினை முடித்த பின்பு , தலைமையாசிரியர்கள் , 16 . 12 . 2019 முதல் 30 . 12 . 2019 வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் ( www . dge . tn . gov . in ) சென்று , இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி , மாணாக்கரது விவரங்களை சரிபார்த்து கூடுதல் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வது தொடர்பாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .

பள்ளியினை பதிவு செய்தல்

1.தலைமையாசிரியர்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் ( www . dge . tn . gov . in ) சென்று Online Portal for School and Educational Offices என்ற வாசகத்தினை click செய்ய வேண்டும் .

 2 . அதன் பின்னர் திரையில் தோன்றும் School registration என்ற வாசகத்தினை click செய்து தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள UDISE Code ( EMIS User ID ) மற்றும் Password - ஐ பயன்படுத்தி , தங்களது பள்ளியின் பெயர் , பள்ளியின் வகை ( Management ) , மின்னஞ்சல் முகவரி , மாவட்டம் போன்ற விவரங்களை பதிவு செய்யவேண்டும் .

3 . School registration - ல் உள்ள பள்ளியின் பெயரே மதிப்பெண் சான்றிதழில் அச்சிடப்படும் என்பதால் பள்ளியின் பெயரை ஆங்கிலத்திலும் , தமிழிலும் சரியாக பதிவேற்றம் செய்யவேண்டும் . பள்ளியின் வகையினையும் ( Management ) சரியாக குறிப்பிடவேண்டும் .

4. மாணாக்கரின் பெயரை தமிழில் பதிவேற்றம் செய்யும் போது , பெற்றோர் / பாதுகாவலர் பெயரையும் முழுமையாக பதிவு செய்தல் வேண்டும் . மாணாக்கரின் பெயர் மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் பெயர்கள் மதிப்பெண் சான்றிதழில் பதியப்படும் என்பதால் அவற்றினை கவனத்துடன் தமிழில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .

குறிப்பு :

ஏற்கனவே NTSE , NMMS மற்றும் + 1 தேர்வுகளின்போது School registration பணியினை மேற்கொண்ட பள்ளிகள் மீண்டும் இப்பணியினை செய்யத் தேவையில்லை
IMG_20191214_094559

IMG_20191214_094611

IMG_20191214_094621

IMG_20191214_094630

IMG_20191214_094648




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive