NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சுண்டு விரலில் இந்த மூன்று பகுதிகள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் அவர்களின் விரல்கள், விரல்களின் நீளம், வடிவம் மற்றும் அதில் இருக்கும் ரேகைகள் போன்றவற்றில் பல வேறுபாடுகள் காணப்படும்.
 
சில கோட்பாடுகளின் மூலம் கைவிரல்களில் இருக்கும் சில பகுதிகள் ஒருவரின் குணநலன்களைப் பற்றி சொல்கிறது.
எனவே இப்போது நமது சுண்டு விரலில் உள்ள மூன்று பகுதிகள் ஒருவரது குணநலன்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
சுண்டி விரலின் முதல் பகுதி
சுண்டு விரலின் முதல் பகுதி நீளமாக இருந்தால், பல மொழிகளை அறிந்தவராக அனைவரையும் கவரக்கூடியவறாக இருப்பார்கள். மேலும் இவர்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது.
சுண்டு விரலின் முதல் பகுதி குட்டையாக இருந்தால், மற்றவர்கள் விரும்பத்தகாத வகையில் இருப்பார்கள். மேலும் இவர்கள் பலவீனமானவர்களாக காணப்படுவார்கள்.
சுண்டி விரலின் இரண்டாம் பகுதி சுண்டு விரலின் இரண்டாம் பகுதி நீளமாக இருந்தால், அவர்களிடம் உதவும் மனப்பான்மை அதிகமாகவும், மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் மருத்துவர்கள், உடல்நல நிபுணர்கள் போன்ற உத்தியோகத்தில் இருக்க அதிக வாய்ப்புள்ளது.
சுண்டு விரலின் இரண்டாம் பகுதி குட்டையாக இருந்தால், பிடிவாத குணமிக்கவர்களாகவும், சிறிது சோம்பேறியாகவும் இருப்பார்கள். மேலும் இந்த வகையினர் மற்றவர்களுக்காக தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
சுண்டி விரலின் மூன்றாம் பகுதி
சுண்டு விரலின் கடைசி பகுதி நீளமாக இருந்தால், நேர்மை குணம் கொண்டதால், எப்போதும் உண்மையை பேசுபவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் நல்ல சொற்றொடர்பு உள்ளவர்களாக, சமூக திறமை கொண்டவர்களாக இருப்பதோடு, சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்.
 
சுண்டு விரலின் மூன்றாம் பகுதி குட்டையாக இருந்தால், அவர்கள் அப்பாவியாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்கள் இவர்களை எளிதில் தன்வசப்படுத்திக் கொண்டு, வேலையை செய்து முடித்து விடுவார்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive