++ ஜியோவின் அடுத்த அதிரடி;திட்டங்கள் அறிவிப்பு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_officialஜியோவின் அடுத்த அதிரடி; 'அன்லிமிட்டெட் பிராட்பேண்ட்' திட்டங்கள்அறிவிப்பு

புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ பைபர்பிராட்பேண்ட், நுகர்வோருக்கு அன்லிமிட்டெட்இணையதள சேவையை வழங்கும்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த புதிய பிராட்பேண்ட் திட்டங்கள், மாதத்திற்கு 399 ரூபாயிலிருந்துதொடங்குகின்றன. இந்த புதிய திட்டங்களின்கீழ், வரம்பற்ற இணைய சேவையை, சமச்சீரான வேகத்தில் பெற முடியும். மேலும், 12 ஓ.டி.டி., (OTT) தளங்களுக்கானசந்தாவையும் பெறலாம்.


அதன்படி, ரூ.399 திட்டத்தில், 30 எம்.பி.பி.எஸ்., (Mbps) வேகத்தில் அன்லிமிட்டெட் இணையமற்றும் வாய்ஸ்கால் வசதி வழங்கப்படுகிறது. ரூ.699 திட்டத்தில், 100 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் அன்லிமிட்டெட் இணைய மற்றும்வரம்பற்ற வாய்ஸ்கால் வசதியையும்பெறலாம். ரூ.999 திட்டத்தில் வரம்பற்றஇணையத்தை 150 எம்.பி.பி.எஸ்., வேகத்துடன்வழங்குகிறது. மேலும் இதில், வரம்பற்றவாய்ஸ்கால் வசதியும் 11 ஓ.டி.டி., தளபயன்பாடுகளுக்கான சந்தாவும்வழங்கப்பட்டுள்ளது. ரூ.1,499 திட்டத்தில், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற வாய்ஸ்கால்சலுகையும், 12 ஓ.டி.டி., தளபயன்பாடுகளுக்கான சலுகையும் 300 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் இணையசேவையையும் பெற முடியும்.


ஓ.டி.டி., தள பயன்பாடுகளை பெற ஜியோ டிவிபிளஸ் (JioTV Plus) வழியாக அணுகலாம். இதில், நெட்பிக்ஸ், அமேசான் பிரைம்வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் வி.ஐ.பி., ஜியோ சினிமா, ஜீ5, சோனி லிவ், வூ, ஆல்ட்பாலாஜி, சன் என்.எக்ஸ்.டி., லயன்ஸ்கேட் பிளே, ஷெமரூ மற்றும்ஹோய்சோய் ஆகியவை அடங்கும்.ஓ.டி.டி., சேவையை ஆன்லைனில் அணுக, ஜியோபைபர் செட்டாப் பாக்சைப் பெறுவதும் இந்ததிட்டங்களில் அடங்கும். செப்., 1 முதல் இந்தபுதிய திட்டங்கள் நடைமுறைக்கு வருகிறது. இதன் புதிய வாடிக்கையாளர்களுக்கு 30 நாள்இலவச சேவையை ஜியோ வழங்குகிறது. அதில், 150 எம்.பி.பி.எஸ்., வேகத்தில்இணைய சேவையையும், 4கே செட்டாப்பாக்சும் வழங்கப்படுகிறது. மேலும்அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் வசதியும்கிடைக்கும்.


'இதைப் பெற, புதிய வாடிக்கையாளர்கள்திருப்பிப் பெறக்கூடிய தொகையை முதலில்டெபாசிட் செய்ய வேண்டும். அதன் பிறகுஅவர்கள் செட்-டாப் பாக்ஸ் மற்றும் ஜியோபைபர் மோடம் ஆகியவற்றைப் பெறலாம்' என, ஜியோ பைபர் தெரிவித்துள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...