Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

TET - 2013ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றும் பணி கிடைக்காமல் தவிக்கும் 80,000 பேர்: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கண்டனம்.

572020
2013-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 7 லட்சம் பேர் தேர்வு எழுதி 94,000 பேர் வெற்றி பெற்றனர். ஆனால் வெறும் 14000 பேருக்கு மட்டுமே பணி ஆணை வழங்கி, 80 ஆயிரம் பேரின் வாழ்க்கையை 7 ஆண்டுகளாக கேள்விக்குறியாக்கி வைத்துள்ளது அரசு என கமல்ஹாசன் கண்டனம்  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழக ஆசிரியர் இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவர் நாற்காலியை அலங்கரித்த மாபெரும் வரலாறு கொண்ட நம் தமிழ்நாட்டு ஆசிரியர் சமூகம், இன்று மூட்டை முடிச்சுகளுடன் வீதியில் நிற்கிறது.
2012க்கு முன் வரை நேரடியாக பணித்தேர்வு ஆணையம் முலம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை (TNTET) கொண்டு வந்தது இதே அதிமுக அரசு தான்.
2013-ல் நடைபெற்ற அந்தத் தேர்வில் 7 லட்சம் பேர் தேர்வு எழுதி 94,000 பேர் வெற்றி பெற்றனர். ஆனால் வெறும் 14,000 பேருக்கு மட்டுமே பணி ஆணை வழங்கி, 80 ஆயிரம் பேரின் வாழ்க்கையை 7 ஆண்டுகளாக கேள்விக்குறியாக்கி வைத்துள்ளது இந்த அரசு.
2013-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்காத அரசு 2014, 2017, 2019-ம் ஆண்டுகளில் தேர்வு நடத்தியது ஏன்? கண் துடைப்பா? ஒருபுறம் தேர்ச்சி அடைந்தவருக்கு ஆசிரியர் பணி இல்லை என்ற அவலமும், இன்னொருபுறம் ஆசிரியர்கள் இல்லை என பள்ளிகள் மூடப்படும் அசிங்கமும் இந்த ஆட்சியில்தான் நடந்து கொண்டிருக்கிறது.
மக்களால் முதல்வராக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத நீங்கள், நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தும்போது, முறையாக தேர்வு பெற்ற 80 ஆயிரம் பேரின் வாழ்க்கையை ஒடுக்குவது ஏன்? இளைய தலைமுறை ஆசிரியர்கள் இந்த அரசைக் கேள்வி கேட்கவும், மாற்றவும் தயங்க மாட்டார்கள் என்ற பயமா?
நேர்மையாக, தகுதியானவர்கள் நேரடியாக பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால் நீங்களும் உங்கள் கட்சிக்காரர்களும் காசு பார்க்க முடியாது என்ற அதிருப்தியா? பெயருக்கு அனுதாப அறிக்கை விடுவதும், அமைச்சர் செங்கோட்டையன் வருத்தப்படுவதும், அவர்கள் வாழ்க்கையை, வாழ்வாதரத்தை மாற்றப் போவதில்லை..
1. வரும் டிசம்பர் மாதம், 2013-ல் தேர்வெழுதி வென்றவர்களின் சான்றிதழ் காலாவதியாகிறது. கல்வி எப்படி காலாவதி ஆகும், 7- ஆண்டு முடிவதால் 80 ஆயிரம் பட்டதாரிகள் வாழ்க்கையை காலாவதி ஆக விடுவதா? உடனடியாக அவர்கள் சான்றிதழ்களை ஆயுட்கால சான்றிதழ்களாக மாற்ற வேண்டும்.
2. காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதில் இவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
3.இவர்கள் வாழ்வாதரம் மீட்க மாத உதவித்தொகையை இந்த அரசு வழங்க வேண்டும்.
ஒரு நல்ல சமூகத்தைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியது. அந்த ஆசிரியர் பணிக்கான கனவுகளோடும், தகுதிகளோடும் இருக்கும் 80 ஆயிரம் பேரின் வாழ்க்கையை சிறிது சிறிதாக அழித்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு. நியாயமாய் கிடைக்க வேண்டிய ஒவ்வொரு விஷயத்தையும் போராடியே பெற வேண்டும் எனும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது.
வேலையின்றி விரக்தியில் சிலர் தற்கொலை செய்ய முயலும் அவல நிலை தமிழகத்தில் தொடராமல் தடுத்திடும் குறைந்தபட்சக் கடமையையேனும் இவ்வரசு செய்ய வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் பந்தாடும் இந்த அரசு மக்கள் சக்தி முன் மண்டியிடும் காலம் வெகு தொலைவில் இல்லை”.
இவ்வாறு கமல்ஹாசன்  தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive