கல்லூரிகளில் ஆல் பாஸ் அறிவிப்பு ‘அரியர் மாணவர்களின் அரசனே’ பிளக்ஸ் போர்டு வைத்து பாராட்டு

IMG_20200828_075953
தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில், அரியர் வைத்த மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவருமே பாஸ் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நேற்று முன்தினம் அறிவித்தார். 

இந்நிலையில், ஈரோடு கொல்லம்பாளையம் ரவுண்டானா அருகே செல்லும் ரோட்டில், அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களின் சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘அரியர்-மாணவர்களின் அரசனே, எடப்பாடியாரே, நீர் வாழ்க, வாழ்க’ என்றும், ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’ என்ற திருக்குறளையும் பதிவிட்டுள்ளனர். இந்த பேனர், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive