++ மனித குழந்தையின் வளர் உருமாற்றச் சுழற்சி மனித நேயமுள்ள மனிதனாக வளர் உருமாற்றம் பெற கல்வியின் பங்களிப்பு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

மனித குழந்தையின் வளர் உருமாற்றச் சுழற்சி
மனித நேயமுள்ள மனிதனாக வளர் உருமாற்றம் பெற கல்வியின் பங்களிப்பு
Dr.J.KomalaLakshmi
ஆரம்பப்பருவம் முதல் பாகம்   :குழந்தை வயது 0-6 years
           
தன்  தேவைகளை அழுகையின் மூலமும் நன்றியினை சிரிப்பின் மூலமும் குழந்தை தானே வெளிப்படுத்துகிறது.

ஆரம்பப்பருவம் இரண்டாம் பாகம் :குழந்தை வயது 7-13 Years

அடிப்படை தேவைகளை தானே செய்து கொள்ள கல்வி அவசியம். பிறர் சொல் கேட்டும் கண்ணால் பார்த்தும் தானே இந்த படிப்பினையை குழந்தை கற்றுக்கொள்ளுகிறது. இதே சமயத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுத்து  ,பண்புகளையும் குணங்களையும் தெரிந்து கொள்ளச்செய்தல்

பதின் பருவம்- கண்ணாடிப் பருவம் 14-19 years

சுயமரியாதை தானே சிந்திக்கும் திறன் மதிப்பு , எதிர்பார்க்கும் குழந்தை. கல்வியும் அதனை சிறப்பாக கற்றுக்கொடுக்க, பெற்றோர்  மற்றும் சமூகத்தின் பங்களிப்பும் அக்கறையும் அன்பும் அதீத பொறுமையும் அவசியம்.

வளர் உரு மற்றம்- ஆரம்ப பாகம் 20-25 years

தனித்தன்மையும் சுய சிந்தனையும் பேராற்றல் மூலம் உள்ளடக்கியிருக்கும். அதனை வெளிக்கொணர தன்னம்பிக்கையும் பயமற்ற தன்மையும் கற்றுக்கொள்ள கல்வி அவசியம்.

வளர் உரு மற்றம்- நடுப்பாகம் 26- 30 yeras

சமுதாயத்தில் பிறரோடு சேர்ந்து அனுசரித்து வாழ கல்வி அவசியம் என்று தன்னை தானே உணர்ந்து செதுக்கிக் கொள்ளும் பருவம்

வளர் உரு மற்ற இறுதி பாகம் 31-35 years

சமூகத்தில் அனைவரும் இணைந்து ஒற்றுமை யாக மகிழ்வுடன்  வாழ்வதுவே வாழ்கை என்று தெரிந்து கொள்ள அனுபவமும் பக்குவமும் கல்வியாக துணை புரிகிறது.

35 years  and above

அந்த குழந்தை தனக்கும் பிறருக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தேசத்திருக்கும் , இந்த பிரபஞ்சத்திற்கும் எதோ ஒரு வகையில் பங்களிக்க பழக்கம் கற்றுக்கொள்ள கல்வி அவசியம்.

ஆகவே ஒரு குழந்தையை மனித நேயமுள்ள மனிதனாய் வளர் உரு மாற்றம் சுழற்சி செய்ய கல்வியின் பங்களிப்பு மிகவும் அவசியம்


0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...