Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆன்லைன் வகுப்பு எனக் கூறி ஃபிரீபயர் கேமில் மாணவர் ரூ.90,000 இழந்த 8ம் வகுப்பு மாணவன் : மாணவனுக்கு நூதன தண்டனை


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே 8ம் வகுப்பு மாணவன் ஒருவர் ஆன்லைன் வகுப்பு என நாடகமாடி ஃபிரீபயர் கேமில் 90 ஆயிரம் ரூபாயை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலாடி தாலுகா மேலகிடாரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகன் தான் இந்த விபரீத நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்.அதுவும் ஆன்லைன் வகுப்பு எனக்கூறி தந்தையின் மொபைல் போனில் திருட்டுத் தனமாக ஃபிரீபயர் கேமில் 90 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளான். இதற்காக அவர் தனது தாயின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அக்கவுண்டில் பணம் குறைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவரின் தந்தை மகனை அழைத்து விசாரித்த போது, ஃபிரீபயர் கேமில் பணம் செலவிட்டதை ஒப்புக் கொண்டுள்ளான். 

இதையடுத்து அவனை ஒன்று முதல் 90 ஆயிரம் வரை எழுத சொல்லி தண்டனை வழங்கியுள்ளனர். குழந்தைகள் உண்மையிலேயே ஆன்லைன் வகுப்பின் போது, படிக்கிறார்களா என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
Source Dinakaran




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive