++ அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுப் பயிற்சி நவம்பர் 9-ஆம் துவக்கம்: அமைச்சர் செங்கோட்டையன் ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
senkottaian

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இணையவழி பயிற்சி நவம்பர் 9ஆம் தேதி துவங்கும் என பள்ளிக் கல்வி அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.

மதுரையில் தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை தேனி திண்டுக்கல் ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 450 பள்ளிகளுக்கு அங்கீகாரம் ஆணைகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது, பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள் ஆசிரியர்கள் கருத்துக் கேட்பு முடிந்த பிறகு முடிவு அறிவிக்கப்படும்.

தற்போது அரசு பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி இறுதி தேர்வுக்கான பாடங்கள் குறைப்பது தொடர்பாக வல்லுநர் குழுவின் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் 40 சதவீத பாடங்களை குறைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறைக்கப்பட்ட பாடங்களின் விவரங்கள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஒன்பதாம் தேதி துவங்கும் என்றார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...