NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் TET நிபந்தனை ஆசிரியர்கள் கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

IMG-20201107-WA0020

தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் அளிக்கும் விழாவில் பங்கேற்க நேற்று ( 07-11-2020 ) மதுரைக்கு வருகைபுரிந்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு K.A.செங்கோட்டையன் அவர்களிடம் அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் பணிபுரியும் TET நிபந்தனை ஆசிரியர்கள் தங்களது TET விலக்கு தொடர்பான கோரிக்கைகளை, நினைவூட்டல் மனுவாக முன்வைத்தனர்.

அதன்படி, ஏற்கனவே TET நிபந்தனைகளுடன் கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக பணியில் உள்ள ஆசிரியர்களைக் காத்து, அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்காதபடி தாய்மை உள்ளத்துடன் தற்போதைய அம்மா அரசு என்றும் துணை நிற்கும் என ஏற்கனவே தமிழக கல்வி அமைச்சர் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு உறுதியளித்தையும் அவர்கள் அமைச்சரிடம் நினைவூட்டினர்

23/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் TET நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் ஆசிரியர்களாகப் பணி நியமனம் பெற்றவர்களுக்கு 16/11/2012 க்குப் பிறகே முன்தேதியிட்டு TET கட்டாயம் என்ற நிபந்தனைகளுக்குக் கீழே இந்த வகை ஆசிரியர்கள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றமும் ஆசிரியர்கள் பாதிக்கப்படாதவாறு முடிவுகளை எடுக்க ஏற்கனவே பலமுறை தமிழக அரசினை அறிவுறுத்தியும் உள்ளது.


ஆகவே 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதுமாக விலக்கும், அதற்கு மாற்றாக புத்தாக்கப் பயிற்சியும் அளிக்க பலமுறை வேண்டுகோள்கள் விடுத்து வந்தோம். எங்கள் நியாயமான கோரிக்கையை கருணை உள்ளத்தோடு இந்த தமிழக அரசு நிறைவேற்றித்தரும் என்று எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் K.சிவஞானம், சந்ரு, பூபதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


மேலும் இந்த கோரிக்கை அடங்கிய மனுக்கள், அவ்விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழக வருவாய் / பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு ஆர். பி. உதயகுமார் அவர்கள் மற்றும் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். எஸ். சரவணன் ஆகியோரின் மேலான கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டன.
20201107_200422




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive