++ வாகனம் ஓட்டும்போது தூங்கும் டிரைவரை எழுப்ப புதிய செல்போன் செயலி: தமிழகத்தின் இந்த பொறியியல் கல்லூரி மாணவன் கண்டுபிடிப்பு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
வாகனம் ஓட்டும்போது தூங்கும் டிரைவரை எழுப்ப புதிய செல்போன் செயலி: தமிழகத்தின் இந்த பொறியியல் கல்லூரி மாணவன் கண்டுபிடிப்பு

வாகனம் ஓட்டும்போது தூங்கும் டிரைவரை எழுப்பும் வகையில், செல்போன் ஆப் ஒன்றை கண்டுபிடித்த மாணவரை, காஞ்சிபுரம் கலெக்டர் பாராட்டினார். காஞ்சிபுரம் எஸ்விஎன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராமச்சந்தரின்.

இவரது மனைவி ஞானசவுந்தரி. இவர்களது மகன் மனோகரன். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் பிஇ, தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எம்இ படித்து முடித்துள்ளார்.

தற்போது மனோகரன், வாகனம் ஓட்டும்போது தூங்கும் டிரைவரை எழுப்பி, விபத்தை தடுக்கும் வகையில் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

இந்த ஆப்ஸ் குறித்து மனோகரன் கூறுகையில், ஸ்மார்ட் போனில் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

 வாகனத்தில் செல்லும்போது, செல்போனை மொபைல் ஹோல்டரில் டிரைவரை பார்ப்பது போல் வைக்க வேண்டும். வாகனத்தை ஓட்டி செல்லும் டிரைவர் கண் அசந்தால், உடனடியாக, அதில் இருந்து ஒலி எழுப்பி அவரை தூக்கத்தில் இருந்து விழிக்க வைக்கும் என்றார்.

விபத்தை தடுக்கும் வகையிலான இந்த புதிய ஆப்ஸை கண்டுபிடித்த, மனோகரனுக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்க  இடம் கிடைத்துள்ளது. படிப்பின் முழு செலவையும் பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...