NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சட்ட கல்லூரி பேராசிரியர் நியமன அறிவிப்பு ரத்து

சட்ட கல்லூரி பேராசிரியர்  நியமன அறிவிப்பு ரத்து

அரசு சட்ட கல்லூரிகளில், பேராசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்பு, அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 தமிழக அரசின் சட்ட கல்லூரிகளில் காலியாக உள்ள, 82 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை, ஜனவரியில், தமிழக சட்ட பல்கலை வெளியிட்டது

.இதன்படி, 15 பேராசிரியர்கள், 28 இணை பேராசிரியர்கள், 35 உதவி பேராசிரியர்கள், 3 உதவி நுாலகர் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குனர் பணியிடங்கள் நிரப்பப்பட இருந்தன. பிப்ரவரி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, புதிய பணியிடங்களை நிரப்ப, அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என, தமிழக அரசு அறிவித்தது. மேலும், சட்ட பேராசிரியர் பதவிக்கு, மத்திய அரசின் பல்கலைகளில், ஒரு ஆண்டு மட்டும், முதுநிலை எல்.எல்.எம்., படித்தவர்களும் விண்ணப்பித்தனர்.

ஆனால், தமிழகத்தில் எல்.எல்.எம்., சட்டப்படிப்பு, இரண்டு ஆண்டுகள் நடத்தப்படுவதால், இரண்டு ஆண்டுகள் படித்தவர்களுக்கே, பணி வாய்ப்பு வழங்க முடியும் என , மாநில அரசின் விதிகள் கூறுகின்றன.

எனவே, பல்கலையின் பணி நியமன விதிகள் மற்றும் கல்வி தகுதியில், உரிய சட்ட விளக்கம் பெற்ற பின், காலியிடங்களை நிரப்ப, தமிழக சட்டத்துறை முடிவு செய்தது.இதையடுத்து, ஜனவரியில் வெளியிடப்பட்ட பணி நியமன அறிவிப்பு, நேற்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பி தரப்படும் என, பல்கலை பதிவாளர், ஆபிரஹாம் உம்மன் அறிவித்துள்ளார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive