++ பள்ளிகளை திறக்கலாமா; வேண்டாமா? தமிழகம் முழுதும் நாளை கருத்து கேட்பு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
பள்ளிகளை, இம்மாதம்,16ம் தேதி முதல் திறப்பது குறித்து, நாளை பெற்றோரிடம் கருத்து கேட்கப்படுகிறது. வகுப்பு வாரியாக பெற்றோர் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், வரும், 16ம் தேதி, பள்ளி, கல்லுாரிகளை திறக்கவும், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களை மட்டும், பள்ளிகளுக்கு வரவழைத்து பாடம் நடத்தவும், தமிழக சுகாதாரத் துறை அனுமதி அளித்தது. இந்நிலையில், பள்ளிகளை திறந்தால், கொரோனா தொற்று அதிகமாகும் என, எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

எனவே, அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் கருத்து கேட்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளை நடக்க உள்ள இந்த கருத்து கேட்பு கூட்டத்துக்கான வழிமுறைகளை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.

ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரை, குறிப்பிட்ட கால இடைவெளியில் வரவழைத்து, கருத்துகளை பெற வேண்டும். தொற்று தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என, வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி திறப்பு கருத்து கேட்பில், பெற்றோர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

 பெற்றோர் இல்லாத நிலையில், காப்பாளர் அல்லது உறவினர்கள் பங்கேற்கலாம்.பெற்றோர் - ஆசிரியர் கழக முன்னாள் நிர்வாகிகள் பங்கேற்க கூடாது.

 பெற்றோர் என்ற பெயரில், அரசியல் கட்சியினர், கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது.சமூக அமைப்புகள், அரசியல், ஜாதி மற்றும்மத அமைப்புகளை சேர்ந்தவர்களையும் அனுமதிக்க கூடாது என, தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு வரும் பெற்றோரிடம், பள்ளிகளை திறக்கலாம் என்றும், திறக்கக்கூடாது என்றும், இரண்டு குறிப்புகள் அடங்கிய விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. அதில், பெற்றோர் தங்கள் பதிலை குறிப்பிட வேண்டும்

.திறக்கக் கூடாது என்றால், அதற்கான காரணத்தையும் விண்ணப்பத்தில் விளக்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...