போட்டி தேர்வு எழுதுவோர் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யும்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு
:டி.என்.பி.எஸ்சி. நடத்தும் போட்டி தேர்வுகளின் நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தங்களின் ஒரு முறை நிரந்தர பதிவுடன் தங்கள் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும்.
ஒரு ஆதார் எண்ணை ஒரு நிரந்தர பதிவுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆதார் சட்டம் 2016ன் படி விண்ணப்பதாரர்களின் ஆதார் குறித்த விபரங்கள் தேர்வாணையத்தால் சேமிக்கப்பட மாட்டாது.
மேலும் ஆதார் எண்ணை விண்ணப்பதாரரின் நிரந்தர பதிவில் இணைப்பதற்கான வழிமுறைகள் அறிவுரைகள் மற்றும் உறுதிமொழி உள்ளிட்ட விபரங்கள் டி.என்.பி.எஸ்.சி.யின் www.tnpscexams.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்த தங்களின் கருத்துகளையும்www.tnpscexams.inஎன்ற இணையதளத்தின் வழியே தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...