++ நவ., 10 ல் பி.எப்., குறைதீர் கூட்டம் ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல கமிஷனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: நிதி உங்கள் அருகில்' என்ற தலைப்பில் பி.எப்., குறைதீர் கூட்டம் மண்டல அலுவலகத்தில் நவ.,10ல் வெபினார் செயலி மூலம் காணொலியாக நடக்கும்.

இதில் கமிஷனர் மூலம் நிறுவன முதலாளிகள் மற்றும் வைப்பு நிதி உறுப்பினர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகள் விசாரித்து தீர்வு காணப்படும்.

இதில் பங்கேற்க கூகுள் பிளே ஸ்டோரில் cisco webex.meetings என்ற செயலியை தங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து பங்கேற்பதற்கான விவரத்தை ro.madurai@epfindia.gov.in என்ற மண்டல அலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். கூட்டத்தில் பங்கேற்பதற்கான 'தொடர்பு எண்' மண்டல அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்படும். விவரம் அறிய தொழில்நுட்ப ஆலோசகர் சிவக்குமாரை 88383 81068 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...