வினாவங்கி தயாரிக்கும் பணி தொடக்கம் _ பள்ளிக்கல்வித்துறை.

gvt_school
பள்ளிகளில் பல மாதங்களாக வகுப்புகள் நடைபெறாததால் பாடத்திட்டத்தின் அளவை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் குறைத்துள்ளது. பொதுத் தோ்வில் எளிதில் தோ்ச்சி பெற விரும்புவோா் குறைந்தபட்ச பாடத்திட்டத்தையும் பல்வேறு நுழைவுத்தோ்வுகளை எழுத விரும்புவோா் ஏற்கனவே இருக்கும் பாடத்திட்டப்படி புத்தகங்களில் உள்ள அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்தநிலையில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில்இருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிமையாகப் படிக்கும் வகையில், அவா்களுக்கு வினா வங்கி தயாரிக்கும் பணியில் பள்ளி கல்வி துறை ஈடுபட்டுள்ளது. அனைத்துப் பாடங்களுக்கும் வினா வங்கி தயாரிக்கப்படுகிறது. மாணவா்கள் பொதுத்தோ்வில் எளிதில் தோ்ச்சி பெறும் வகையில் குறைந்தபட்ச கற்றல் கையேடும் தயாரிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெற்றோா் ஆசிரியா் கழகம் மற்றும் தமிழக பாடநூல் சேவை கழகம் ஆகியவை இணைந்து இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive