NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வீடு கட்ட அரசு மானியம்: இதைக் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்... கோரிக்கை நிலையையும் சரிபார்க்கலாம்.

மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டத்தின் பயன்கள், அதில் எப்படி இணைவது, விண்ணப்ப நிலவரம் போன்றவற்றைத் தெரிந்துகொள்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

பிஎம் ஆவாஸ் யோஜனா!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற வீட்டு வசதித் திட்டம் 2015ஆம் ஆண்டில் மத்திய மோடி அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும். மலிவு விலையில் வீடுகளைக் கட்டித் தருவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்த 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளைக் கட்டி முடிக்க இத்திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இத்திட்டம் வழங்குகிறது.
மானிய உதவி!

வீடு கட்டுவதற்கு நீங்கள் வாங்கும் கடன் தொகையைப் பொறுத்து உங்களுக்கு அரசிடமிருந்து மானிய உதவி கிடைக்கும். நீங்கள் வங்கியில் கடன் வாங்கும்போது அந்தப் பணம் ஈஎம்ஐ ஆக உங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். உங்களுக்கு அரசிடமிருந்து நேரடியாக மானியத் தொகை வராது. அது நீங்கள் வாங்கும் கடனிலேயே அட்ஜஸ்ட் ஆகிவிடும். நீங்கள் ஒருவேளை வங்கியில் வீடு கட்டுவதற்கு ரூ.6 லட்சம் கடன் வாங்கினால் அரசிடமிருந்து உங்களுக்கு ரூ.2.20 லட்சம் மானியமாக வந்து சேரும். அப்போது நீங்கள் பாக்கித் தொகை ரூ.3.90 லட்சத்தை மட்டும் வங்கியிடம் திருப்பிச் செலுத்தினால் போதும்.
எப்படி விண்ணப்பிப்பது?

ஆவாஸ் யோஜனா திட்டத்தின் http://pmaymis.gov.in. என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செல்லவும்.

மெயின் மெனுவின் கீழ் உள்ள 'Citizen Assessment' என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பதாரர் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

அதன் பின்னர் வரும் திரையில் உங்களது ஆதார் விவரங்களைப் பதிவிட வேண்டும்.

உங்களது தனிப்பட்ட விவரங்கள், வருமானம், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தற்போதைய குடியிருப்பு முகவரியுடன் ஆன்லைன் PMAY விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.

கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு விவரங்களைச் சரிபார்த்துச் சமர்ப்பிக்கவும்.
செக் பண்றது எப்படி?

பிஎம் ஆவாஸ் யோஜனா அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

’search beneficiary’ என்பதைக் கிளிக் செய்யவும்..

ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் உங்களது ஆதார் எண்ணை உள்ளிடவும்.

பின்னர் உங்களது பெயரின் முதல் மூன்று எழுத்துக்களைப் பதிவிடவும். அதாவது உங்களது பெயர் sivachandran என்றால் siv என்று பதிவிடவும்.

அதன் பின்னர் 'show' என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது பட்டியலில் உங்களது பெயர் விவரம் காண்பிக்கப்படும்.

sivachandran என்ற பெயரில் நிறையப் பேர் இருந்தால் உங்களுக்குக் குழப்பம் இருக்கலாம். அப்போது நீங்கள் ctrl + f அழுத்தி உங்களது தந்தை பெயரைப் பதிவிட்டால் உங்களது விவரத்தை நீங்கள் பார்க்கலாம்

நீங்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் (Rural) விண்ணப்பித்திருந்தால் rhreporting.nic.in?netiay/benificiary.aspx என்ற முகவரியில் செல்லவும்.

புதிய பக்கம் ஓப்பன் ஆகும். அதில் உங்களது பதிவு எண்ணைக் கொடுத்து கிளிக் செய்யவும்.

இப்போது உங்களைப் பற்றிய விவரங்கள் ஓப்பன் ஆகும். ஒருவேளை உங்களிடம் பதிவு எண் இல்லையென்றால் ’Advance searc’h என்பதை கிளிக் செய்து அந்தப் படிவத்தை நிரப்பவும்.

’search' என்ற வசதியை கிளிக் செய்தால் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பட்டியல் ஓப்பன் ஆகும்.

உங்களது பெயர் இணைக்கப்பட்டிருந்தால் பட்டியலில் உங்களது பெயர் மற்றும் விவரங்கள் இடம் பெற்றிருக்கு






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive