NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொதுமுடக்க காலகட்டத்தில் கல்லூரி பருவத் தேர்வு நடந்ததாக அண்ணா பல்கலை சான்றிதழ்: மாணவர்கள் குழப்பம்.

1611735255719

கரோனா காரணமாக 2020 மார்ச்மாதம் முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் இருந்ததால், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கல்லூரி பருவத் தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டன. ஆனால், பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி பருவத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் செப்டம்பரில் இணைய வழியில் நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்று, பட்டப்படிப்பு முடித்ததாக சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு மே மாதம் பருவத் தேர்வு நடைபெற்றதாக பல்கலைக்கழகம் சான்றிதழ் வழங்கியுள்ளது. பொறியியல் கல்லூரிகளோ செப்டம்பரில் தேர்வு நடந்ததாக குறிப்பிட் டுள்ளன. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக ஒரு மாண வரின் தந்தை கூறியதாவது:



சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த என்மகன் இறுதி பருவத் தேர்வைசெப்டம்பரில் எழுதினார். கல்லூரிவழங்கிய சான்றிதழிலும் அப்படிதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அண்ணா பல்கலைக்கழக சான்றிதழில் மே மாதம்தேர்வு எழுதியதாக குறிப்பிடப்பட் டுள்ளது. இந்நிலையில், ஜப்பான்நிறுவன பணிக்காக எனது மகன்விண்ணப்பித்தார். பல்கலைக்கழக சான்றிதழை பார்த்த அந்த நிறுவனம், ‘மே மாதம் உலகமே பொது முடக்கத்தில் இருந்தபோது நீங்கள் மட்டும் எப்படி தேர்வு எழுதினீர்கள்’ என்று கேள்வி எழுப்பி, பல்கலைக்கழக சான்றிதழில் முரண்பாடு இருப்பதாக கூறி விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர்.

இதுகுறித்து பல்கலை மற்றும் கல்லூரியில் கேட்டதற்கு சரியான பதில் இல்லை. எனவே, சான்றிதழ் முரண்பாடு குறித்து ஏஐசிடிஇயிடம் புகார் கொடுக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.வெங்கடேசனிடம் கேட்டபோது, “பொறியியல் மாணவர்கள் 4 ஆண்டுகளில் பட்டப் படிப்பை முடிக்கும்போது, மே மாதம் தேர்வு எழுதி முடித்ததாகத்தான் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. எனவே, கரோனா பரவல் காரணமாக செப்டம்பரில் தேர்வு எழுதியிருந்தாலும், மே மாதம் எழுதியதாகவே வழங்க முடியும்.இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுதொடர்பாக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் பல்கலைக்கழகத்தை அணுகலாம்” என்று தெரிவித்தார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive