கொவிட் -19 இரண்டாவது அலையை
முன்னிட்டு , இபிஎப் சந்தாதாரர்கள் , தங்கள் கணக்கில் இருந்து 2 வது
முறையாக முன்பணம் எடுத்துக் கொள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி
கழகம் ( இபிஎப்ஓ ) அனுமதித்துள்ளது. கொவிட் தொற்று சமயத்தில் இபிஎப்
சந்தாதாரர்கள் சிறப்பு முன்பணம் எடுத்துக்கொள்ளும் வசதி பிரதமரின் ஏழைகள்
நலன் திட்டத்தின் கீழ் ( PMGKY ) கடந்த 2020 மார்ச் மாதம் அறிமுகம்
செய்யப்பட்டது . இதற்கான திருத்தத்தை அரசாணை மூலம் தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதி திட்டம் 1952 - ல் , மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
அமைச்சகம் செய்தது . இந்த விதிமுறையின் கீழ் , 3 மாத அடிப்படை சம்பளம்
மற்றும் பஞ்சப்படி ( டி.ஏ ) அல்லது இபிஎப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில்
75 சதவீதம் இதில் எது குறைவோ , அதை திருப்பிச் செலுத்த தேவையில்லாத
முன்பணமாக இபிஎப் சந்தாதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம் . குறைவான தொகைக்கும் ,
உறுப்பினர்களால் விண்ணப்பிக்க முடியும் . இந்த கொவிட் -19 முன்பணம் ,
தொற்று காலத்தில் இபிஎப் உறுப்பினர்களுக்கு குறிப்பாக ரூ .15,000 - க்கும்
கீழ் சம்பளம் பெறுபவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது . தற்போது , வரை
இபிஎப்ஓ 76.31 லட்சம் கொவிட் -19 முன்பண கோரிக்கைகளை ஏற்று ,
உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ .18,698.15 கோடி விநியோகித்துள்ளது . கொவிட்
-19 இரண்டாம் அலை சமயத்தில் , ' மியுகோமைகோசிஸ் ' அதிகமாக பரவும் நோயாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிக்கலான நேரத்தில் , உறுப்பினர்களின் நிதி
தேவைகளை தீர்க்க , அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட இபிஎப்ஓ முயற்சிக்கிறது .
ஏற்கனவே முதல் முன்பணம் எடுத்த இபிஎப் உறுப்பினர்கள் , தற்போது , 2 வது
முறையாக முன் பணம் எடுக்கலாம். இதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் ,
முதல் முன்பணம் எடுத்ததற்கான விதிமுறைகளை போன்றதுதான்.
Quarterly Exam Questions 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» கொவிட் -19 இரண்டாவது அலை : இபிஎப் கணக்கிலிருந்து முன்பணம் எடுக்க அனுமதி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...