Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள்: மீண்டும் செயல்படுத்துமா அரசு?


 

 

 

 

 

 

 

 

கொரோனோ தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் எதிர்பார்க்காத வகையில் உள்ளதால், அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அலோபதியுடன், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை மருந்துகளை சேர்த்து அளிக்கப்படும் ஒருங்கிணைந்த சிகிச்சைக்கு, நல்ல பலன் கிடைத்து வருவதை, அரசே உறுதி படுத்தி உள்ளது.எனவே, அரசின் அனைத்து மருத்துவமனைகளிலும், சாதாரண சிகிச்சை முதல், தீவிர சிகிச்சை வரை, இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எதிர்ப்பு மருந்துகள்

இந்திய மருத்துவ முறையில், கொரோனா தொற்றை தடுக்க, பயன்படுத்த வேண்டிய மருந்துகளின் விபரங்களை, தமிழக அரசு கடந்த ஆண்டு ஏப்., 23ல், அரசாணையாக வெளியிட்டது. நோய் எதிர்ப்பு சக்திக்காக அரசு பரிந்துரைத்த மருந்துகள் விபரம்:

சித்த மருத்துவம்: இம்மருத்துவ முறையில், கபசுர குடிநீர் அல்லது நிலவேம்பு கஷாயத்தை, பெரியவர்கள், 60 - - 90 மி.லி., வரை; சிறியவர்களுக்கு, 35 -- 45 மி.லி., வரை, உணவுக்கு முன், தினமும் ஒரு வேளை என, ஒரு மாதம் அருந்தலாம். குழந்தைகளுக்கு டாக்டர் அறிவுரை கேட்டு, அதற்கேற்ப வழங்க வேண்டும்.

ஆயுர்வேத மருத்துவம்: நன்கு காய்ச்சி, ஆற வைக்கப்பட்ட, 60 மி.லி., குடிநீரில், 15 மி.லி., இந்து காந்த கஷாயம் கலந்து, தினமும் இரண்டு வேளை, உணவுக்கு முன் அருந்தலாம். 10 கிராம் கூஷ்பந்த ரசாயனம் அல்லது அகஸ்த்ய ரசாயனத்தை, டாக்டரின் அறிவுரைக்கேற்ப, உணவுக்கு பின், தினமும் இருவேளை சாப்பிடலாம்.


யோகா மற்றும் இயற்கை மருத்துவம்: இம்முறையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பெரிய நெல்லிக்காய், துளசி, இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் கலந்த ஜூஸ், ஒரு நாளைக்கு இரு முறை, 250 மி.லி., அருந்தலாம்; குழந்தைகள், 100 மி.லி., பருகலாம். தோல் நீக்கி இடிக்கப்பட்ட இஞ்சி, துளசி, கறுப்பு மிளகு, அதிமதுரம், மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து, பெரியவர்கள் ஒரு நாளைக்கு, இரு முறை, 50 மி.லி., - சிறியவர்கள், 20 மி.லி., பருகலாம்.யோகா சிகிச்சை முறையில், வஜ்ஜிராசனம், பாஸ்த்ரிக பிராணாயாமம், பிராமரி பிராணாயாமம் மற்றும் கிரியா செய்யலாம். சூரிய குளியல், நீர் சிகிச்சை, அரோமா சிகிச்சை போன்றவற்றை இயற்கை மருத்துவர்கள் அறிவுரையின்படி மேற்கொள்ளலாம்.

யுனானி மருத்துவம்: இம்முறையில் பேஹிதனா, உன்னாப், சபிஸ்தான் வடிநீர் பயன்படுத்தலாம்.ஹோமியோபதி: இம்மருத்துவ முறையில், அர்செனிகம் அல்பம் -- 30 சி, தினம் ஒரு வேளை வீதம், மூன்று நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிடலாம். பிரையோனியா ஆல்பா, ரஸ் டாக்சிகோ டெண்ட்ரான், பெல்லடோனா ஜெல்சிமிமம் யூபடோரியம், பெர்போலியாடம் ஆகியவற்றை ஹோமியோ மருத்துவர்கள் ஆலோசனை பெற்று சாப்பிடலாம்.

குணமடைய: ஆயுர்வேத மருத்துவத்தில், தசமூலா கடுத்ரயம் கஷாயம், இந்து கந்தம் கஷாயம், வியாக்ரியாதி கஷாயம் ஆகியவற்றை சாப்பிடலாம். இது தவிர, மூலிகை சிகிச்சையை, டாக்டர் ஆலோசனைப்படி பெறலாம்.சித்த மருத்துவ முறையில், அமுக்ரா சூரணம் மாத்திரை இரண்டை, தினமும் இரு வேளை, உணவுக்கு பின் சாப்பிடலாம். நெல்லிக்காய் லேகியம், 5 முதல், 10 கிராம், தினமும் இரு வேளை உணவுக்கு பின் சாப்பிடலாம்மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போருக்கு, யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைப்படி, ஏற்கனவே கூறப்பட்ட நோய் எதிர்ப்பு ஜூஸ் வழங்கலாம். ஆசனங்கள் கற்றுத் தரலாம்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive