அளவுக்கு அதிகமாக நீராவி பிடித்தால் கறுப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுமா?

பெங்களூரு:“அதிகமாக நீராவி பிடித்தால், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது,” என, பிரபல மருத்துவர் தீபக் ஹால்திபூர் எச்சரித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடையும் நோயாளிகள் கறுப்பு பூஞ்சை என்ற நோயால் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

சிகிச்சை

கர்நாடக தலைநகர் பெங்களூரில், கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளித்து வரும் பிரபல காது, மூக்கு மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கான மருத்துவர் தீபக் ஹால்திபூர் கூறியதாவது:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தான், கறுப்பு பூஞ்சை நோயால் அதிக அளவில் பாதிக்கப் படுகின்றனர். அவர்கள், மருத்துவமனைக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடி மாத்திரை மருந்துகளை மட்டும் எடுத்து வருகின்றனர்.

அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.கறுப்பு பூஞ்சை பரவலுக்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது என்னவென்றால், மரமணு மாறிய கொரோனா வைரஸ்.

முற்றிலும் தவறு

இரண்டாவது, மக்களில் பலரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாமல் இருப்பது.மூன்றாவது காரணம், மக்கள் வீட்டில் இருந்தபடி தொடர்ந்து நீராவி பிடிப்பது.நீராவி பிடித்தால் கொரோனாவில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம் என, மக்கள் நினைக்கின்றனர்; அது முற்றிலும் தவறு. அதிகப்படியாக நீராவி பிடிப்பதால், மூக்கின் உட்புறம் உள்ள எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். கறுப்பு பூஞ்சை நோய்க்கிருமி காற்றில் கலந்து உள்ளது. இதை நம் மூக்கு தடுக்கும். ஆனால், நீராவி பிடிப்பதால் மூக்கின் உட்புறம் உள்ள எதிர்ப்பு திறன் குறைந்து விடும். இதை மக்கள் உணரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive