Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

தன்னார்வலர்களுக்காக இணையதளம் துவக்கம்

Screenshot_20210528_072839
கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு உதவ விரும்புவோர், அரசு இணையதளத்தில் பதிவு செய்து, மக்களுக்கு உதவும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:கொரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அரசு செயல்பட மாநில, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழு, சென்னை தேனாம்பேட்டை, தேசிய சுகாதார இயக்க வளாகத்தில் இயங்கி வரும் கட்டளை மையத்தில், தன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், பெருந்தொழில் நிறுவனங்கள், https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில், தங்களை பதிவு செய்து, மக்களுக்கு உதவும் பெரும் பணியில், தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழு சார்பில், https://www.facebook.com/tnngocoordination/ என்ற முகநுால் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.மேலும், 87544 91300 என்ற மொபைல் போன் எண்ணிலும், tnngocoordination@gmail.com என்ற இணையதளம் வழியாகவும், மாநில ஒருங்கிணைப்பு குழுவை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive